ஐபிஎல் சீசன் கிரிக்கெட் திருவிழா இன்னும் சில தினங்களில் நடைபெற உள்ளது. இதன் முதல் போட்டியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டு விளையாட உள்ளது.
இந்த சூழ்நிலையில் பெங்களூர் அணியின் ஆலோசகர் மற்றும் பேட்டிங் பயிற்சியாளர் ஆன தினேஷ் கார்த்திக் தனது அணி குறித்து சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
ஐபிஎல் சீசன் கிரிக்கெட் தொடர்
இதுவரை கோப்பையை வெல்லாத அணிகளில் ஒன்றாக கருதப்படும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, இந்த முறை அணித்தேர்வில் மிகவும் கவனத்தோடு செயல்பட்டுள்ளது. கடந்த 17 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் விளையாடும் பெங்களூர் அணி ஒரு முறை கூட கோப்பையை வெல்லவில்லை என்கிற சோக வரலாறு திகழ்கிறது. காரணம் அந்த அணிக்கு பேட்டிங் பட்டாளம் மிக வலுவாக இருந்தாலும் பந்து வீச்சில் குறிப்பிடத்தக்க வீரர்கள் இல்லாததால் அந்த அணியால் சிறப்பாக செயல்பட முடியாமல் போனதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்.
இந்த சூழ்நிலையில் அதனை கருத்தில் கொண்டு சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் ஏலத்தில் பெங்களூர் அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிற்கும் சம அளவு முக்கியத்துவம் கொடுத்து வீரர்களை தேர்வு செய்துள்ளது. குறிப்பாக பந்துவீச்சில் புவனேஸ்வர் குமார், ஹாசில் வுட் போன்ற திறமையான வேகப்பந்துவீச்சாளர்கள் இந்த முறை உள் அடக்கி இருக்கிறார்கள். மேலும் பேட்டிங்கில் விராட் கோலி, பில் சால்ட், லிவிங்ஸ்டன் போன்ற அதிரடி ஆட்டக்காரர்கள் இருக்கின்றனர். இந்த சூழ்நிலையில் தினேஷ் கார்த்திக் இது குறித்து சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
இதில் கவனமாக இருந்தோம்
இது குறித்து அவர் கூறும் போது “எனவே இந்த ஏலத்தை பொருத்தவரை முழு ஏலத்திலும் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் என இரண்டிற்கும் சம அளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று அதில் மிகுந்த கவனத்தோடு செயல்பட்டோம். மேலும் எங்கள் பாதையில் ஒரு சமநிலையை ஏற்படுத்த சிறந்த வழி என்று நாங்கள் நினைத்தபடி ஒரு அணியை தேர்ந்தெடுக்க விரும்பினோம். எனவே தற்போது வரை பெங்களூர் அணி காகிதத்தில் நன்றாக இருக்கிறது.
இதையும் படிங்க:ஒரே நாளில்.. இந்த 3 விஷயத்தை செய்ய.. இந்திய அணியால் மட்டுமே முடியும்.. அதன் ஆழம் பெரிது – ஸ்டார்க் பிரமிப்பு
எல்லா அணிகளுமே அதன் காகிதத்தில் நன்றாக உள்ளன என்று நினைக்கிறேன். ஆனால் பெங்களூர் அணி ஒவ்வொரு சூழ்நிலையிலும், ஒவ்வொரு வீரருக்கும் அவர்களின் பங்கிற்கும், கடினமான சூழ்நிலைகளில் அணிக்கு அவர்கள் என்ன செய்ய முடியும் என்பதற்கும் சமமான முக்கியத்துவம் கொடுக்க எல்லாவற்றையும் செய்யும்” என்று தினேஷ் கார்த்திக் பேசி இருக்கிறார். அதாவது பெங்களூர் அணி இனி விராட் கோலியை மட்டுமே முழுமையாக நம்பி இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று மறைமுகமாகவும் பேசியிருக்கிறார்.






