கம்பீர் அடுத்த டிராவிட் புஜாரா வேணாமா? சாய் சுதர்சனை வச்சி மியூசிக் சேர் ஆடாதீங்க.. அவர் யூஸ் இல்லையா? – ஆகாஷ் சோப்ரா கேள்வி

0
29
Gambhir

இன்று தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மூன்றாவது இடத்தில் விளையாடும் சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இதுகுறித்து இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா விமர்சனம் செய்திருக்கிறார்.

இதில் இன்னொரு ஆச்சரியப்படும் விஷயமாக மூன்றாவது இடத்தை இன்னொரு தமிழ்நாட்டு வீரரான வாஷிங்டன் சுந்தருக்கு கம்பீர் கொடுத்திருக்கிறார். ஆனால் மூன்றாவது இடம் எப்பொழுதும் ஒரு முழுமையான பேட்ஸ்மேனுக்கு கொடுத்து வளர்க்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

உங்களுக்கு பிடிக்கவில்லையா

இதுகுறித்து ஆகாஷ் சோப்ரா பேசும் பொழுது ” வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக டெல்லியில் சாய் சுதர்சன் ரன்கள் எடுத்த பிறகும் அவர் உங்களுக்கு பிடிக்கவில்லையா? அப்படி உங்களுக்கு பிடிக்காத போதும் அவரை அணியில் வைத்திருக்கிறீர்களா? 15 பேர் வேண்டும் என்பதற்காக மட்டுமே உங்களுடைய அணியில் அவர் இருக்கிறாரா? ஆனால் இதற்காக ஒருவரை அணியில் வைத்துக் கொள்ள முடியாது. அதனால்தான் இந்திய அணி நிர்வாகத்தின் சிந்தனை என்னவென தெரியவில்லை குழப்பமாக இருக்கிறது”

” தற்போது பிளேயிங் லெவனில் சாய் சுதர்சன் இல்லை. அவர் இதற்கு முன்பு ரன்கள் எடுத்திருந்த போதும் நீக்கப்பட்டிருக்கிறார். அதே சமயத்தில் ஒருவரை அணியில் வைத்துக்கொண்டு நீக்கினால் அவர் பயனற்றவர் ஆகி விடமாட்டார். ஆனால் நீங்கள் மூன்றாவது இடத்திற்கு சரியான வீரரை வளர்த்து எடுப்பதற்கான வாய்ப்பை இழக்கக்கூடாது. இந்த இடத்திற்கு மியூசிக் சேர் விளையாட்டை விளையாட கூடாது”

- Advertisement -

டிராவிட் புஜாரா வேண்டாமா?

“ராகுல் டிராவிட் புஜாரா போன்ற வீரர்களை இங்கு நாம் அடையாளம் காண வேண்டாமா? முன்பு இந்த இடத்தில் கருண் நாயர் இருந்தார். அடுத்து சாய் சுதர்சன் வந்தார். இப்போது அவரும் இல்லை. அடுத்து இந்த இடத்தில் அபிமன்யு ஈஸ்வரனை பார்க்கலாமா?”

இதையும் படிங்க : தென் ஆப்பிரிக்க கேப்டனுக்கு இந்திய கேப்டனின் மாஸ் ஸ்கெட்ச்.. ரிஷப் பண்டின் அட்வைஸ் – களத்தில் என்ன நடந்தது?

” மூன்று ஸ்பின்னர்கள் மற்றும் இரண்டு பாஸ்ட் பவுலர்கள் இருந்தும் கடைசியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பந்துவீச்சில் கொஞ்சம் விக்கெட் எடுக்க தடுமாறியது. இதற்காக இன்று இவர்கள் ஆறாவதாக ஒரு ஸ்பின்னரை உள்ளே கொண்டு வந்திருக்கிறார்கள். சாய் சுதர்சன் இல்லாதது பேட்டிங்கில் பிரச்சனை உண்டாக்காது. ஆனால் நீங்கள் ஒரு பேட்ஸ்மேனை உருவாக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -