இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் பதவிக்கு ரோஹித் ஷர்மா சரியான தேர்வாக இருக்கமாட்டார் – ஆகாஷ் சோப்ரா அளிக்கும் விளக்கம்

0
149
Akash Chopra about Rohit Sharma Test Captaincy

கடந்த ஜனவரி 15ஆம் தேதி விராட் கோலி இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறினார். கடந்த வருடம் டி20 போட்டிகள் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து அவர் கீழே இறக்கப்பட்டுருந்தார். அதனை அடுத்து தற்போது டெஸ்ட் போட்டியிலும் அவர் கேப்டன் பதவியில் இருந்து கீழே இறங்கியது அவரது ரசிகர்கள் மட்டுமின்றி பல ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் கேப்டனாக தற்போது ரோஹித் ஷர்மாவை பிசிசிஐ நியமித்துள்ளது. இதனையடுத்து டெஸ்ட் போட்டிகளுக்கும் அவரையே புதிய கேப்டனாக நியமிக்க ஆலோசனையை பிசிசிஐ தரப்பில் எடுத்து வருவதாக தகவல் கசிந்துள்ளது. ஆனால் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா பிசிசிஐ எடுத்துள்ள இந்த முடிவு சரியானதாக இருக்குமா என்கிற கேள்வியை தற்போது எழுப்பி உள்ளார்.

- Advertisement -

இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் பதவி குறித்து ஆகாஷ் சோப்ரா ஆலோசனை

தற்பொழுது உள்ள இந்திய வீரர்கள் மத்தியில் மிகவும் ஆர்வம் உள்ளவர்கள் என்றால் அது ரோஹித் மற்றும் அஜிங்கிய ரஹானே மட்டுமே. ரஹானே தற்பொழுது சிறப்பாக விளையாட நிலையில், அவரை இந்திய அணியில் இருந்து வெளியேற்ற முடிவு எடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

எனவே ரோஹித் ஷர்மாவையே புதிய கேப்டனாக டெஸ்ட் போட்டிகளுக்கு அறிவிக்கலாம். ஆனால் கடந்த சில ஆண்டுகளில் அப்போது காயம் காரணமாக நிறைய போட்டிகளில் விளையாடாமல் இருந்திருக்கிறார். எனவே இந்த கண்ணோட்டத்தில் பார்த்தால் இந்திய அணியின் புதிய டெஸ்ட் கேப்டன் பதவிக்கு அவர் சரியான தேர்வாக இருப்பாரா என்கிற கேள்வி எனக்கு எழுகிறது என்று ஆகாஷ் சோப்ரா தற்பொழுது கூறியுள்ளார்.

அவருக்கு அடுத்தபடியாக கேஎல் ராகுல் நிறைய டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருந்தாலும் அவர் விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா போன்று மிக சிறப்பாக அணியை தலைமை தாங்குவாரா என்கிற கேள்வியும் எனக்கு கூடுதலாக எழுகிறது.

- Advertisement -

ஒரு பக்கம் புதிய கேப்டனாக ரிஷப் பண்ட் பெயரை அறிவிக்கப்பட நிறைய வாய்ப்பு உள்ளதாக வதந்தி பரவுகிறது. மறுபக்கம் ஜஸ்பிரித் பும்ரா இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் பதவி தனக்கு கிடைத்தால் அந்த பொறுப்பை மிகச்சரியாக செய்வேன் என்கிற நோக்கத்தில் தனது விருப்பத்தையும் தெரிவித்திருக்கிறார்.

எனவே பிசிசிஐ எந்த வீரரை இந்திய அணியின் புதிய டெஸ்ட் கேப்டனாக அறிவிக்க போகின்றது என்பதை தற்பொழுது நாம் உறுதியாக சொல்லிவிட முடியாது. இறுதியில் பிசிசிஐ எடுக்கும் முடிவு நிரந்தரமானது, எனவே பிசிசிஐ எடுக்கும் முடிவை எதிர்நோக்கி காத்திருப்போம் என்று ஆகாஷ் சோப்ரா இறுதியாக கூறி முடித்தார்.