பரத் கிரிக்கெட் வாழ்க்கையை வீணடிக்காதீங்க ரோகித் சர்மா, 4வது டெஸ்ட் ப்ளெயிங் லெவனில் இருந்து அவரை தூக்குவது நியாயமற்றது – முன்னாள் இந்திய வீரர் கருத்து!

0
306

நான்காவது டெஸ்ட் போட்டியின்போது, கேஎஸ் பரத் வெளியில் அமர்த்தப்படுவதாக வந்த தகவலுக்கு தனது கருத்தை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார் ஆகாஷ் சோப்ரா.

குஜராத் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இதில் இந்திய பிரதமர் மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பிக்கின்றனர்.

- Advertisement -

நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டியை இந்திய அணியும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணியும் வென்றது.

தொடரைக் கைப்பற்றி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு முன்னேறும் நோக்கில் இந்திய அணி தீவிரமாக இருக்கிறது. அதேநேரம் ஆஸ்திரேலியா கடைசி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று இந்த பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை சமன் செய்யும் முனைப்பில் இருக்கிறது. ஆகையால் இரண்டு அணிகளுக்கும் கடைசி டெஸ்ட் போட்டி மிக முக்கியமானதாக உள்ளது.

இந்த கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனிலிருந்து கேஸ் பரத் வெளியில் அமர்த்தப்பட்டு, இஷான் கிஷன் உள்ளே எடுத்துவரப்பட உள்ளார் என்ற தகவல்கள் வெளியானது.

- Advertisement -

கேஎஸ் பரத் கீப்பிங் மற்றும் பேட்டிங்கில் நன்றாக செயல்பட்டிருக்கிறார். டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் செயல்பாட்டையும் பார்த்துவிட்டு, இவரை வெளியில் அமர்த்தலமா? வேண்டாமா? என்பதை பார்த்துவிட்டு ரோகித் சர்மா முடிவெடுக்கவும் என 4வது டெஸ்டில் கேஎஸ் பரத் பிளேயிங் லெவனில் இல்லை என்கிற தகவலுக்கு முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டதாவது:

“கேஎஸ் பரத், எந்தவித குறையும் இன்றி கீப்பிங்கில் நன்றாக செயல்பட்டார். டெல்லி மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட்டின் இரண்டாவது இன்னிங்சில் மிகச்சிறந்த பங்களிப்பை கொடுத்தார். பேட்டிங்கில் நன்றாக செயல்படவில்லை என்று நான்காவது டெஸ்ட் போட்டியில் அவரை வெளியில் அமர்த்தினால், அது கேளிக்கைக்கு உரியதாக இருக்கும். என்னெனில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களே சரியாக செயல்படவில்லை.” என குறிப்பிட்டுள்ளார்.