தற்போது ஆசியக் கோப்பை டி20 தொடருக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஜெய்ஸ்வால் இருவருக்கும் ஏன் வாய்ப்பு தரப்படவில்லை என இந்திய தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கம் அளித்திருக்கிறார்.
இன்று மும்பையில் ஆசியக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இந்தத் தொடர் வருகின்ற செப்டம்பர் ஒன்பதாம் தேதி துவங்குகிறது. மேலும் இந்த தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் ஆசியக் கோப்பை இந்திய அணியில் மூன்றாவது துவக்க ஆட்டக்காரர் இடத்திற்கு கில் பெயர் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் அச்சர் படேலிடம் இருந்து துணை கேப்டன் பதவி பறிக்கப்பட்டு கில்லுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் அடுத்த டி20 கேப்டனாக கில் வருவார் என்று உறுதி செய்யப்படுகிறது.
இந்த நிலையில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் கில்லை விட சிறந்த ஸ்ட்ரைக் ரேட் மற்றும் ஆவரேஜ் வைத்திருக்கும் ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இதே போல டாப் ஆர்டரில் விளையாடக்கூடிய கில்லை விட சிறந்த செயல்பாட்டை வைத்திருக்கும் ஸ்ரேயாஸ் ஐயருக்கும் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.
தற்போது இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள அஜித் அகர்கர் கூறும் பொழுது “நாங்கள் ஸ்ரேயாஸ் ஐயரை மதிக்கிறோம். ஆனால் அவரை யாருடைய இடத்திற்கு தேர்வு செய்வது? இது எங்களுடைய தவறும் கிடையாது அவருடைய தவறு கிடையாது”
இதையும் படிங்க : ஆசிய கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு.. சுப்மன் கில்லுக்கு புதிய பொறுப்பு.. பல சர்பரைஸ் வைத்த அகார்கர்
“மேலும் ஜெய்ஸ்வாலை தேர்வு செய்ய முடியாதது துரதிஷ்டவசமானது. அவர் தற்போது சிறப்பாக பேட்டிங் செய்கிறார் மேலும் அவரால் பந்து வீசவும் முடியும். எனவே இதன் காரணத்தால் ஜெய்ஸ்வாலை தேர்வு செய்ய முடியவில்லை. இதுவே தான் ஸ்ரேயாஸ் ஐயருக்கும் நடந்தது. இதில் யாருடைய தவறும் கிடையாது” என்று கூறியிருக்கிறார்.