“ஒரு ரூபாய் கூட சம்பளம் இல்லாமல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் விளையாடிய அஜிங்கியா ரகானே” – காரணம் என்ன தெரியுமா?

0
9675

ஐசிசி யின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்து ஆஸ்திரேலியா அணி சாம்பியன் பட்டத்தை வென்றது . இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்ற இறுதிப்போட்டியில் 209 தங்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வென்று கோப்பையை கைப்பற்றியது .

முதல் இன்னிங்ஸில் மிகச் சிறப்பாக விளையாடி சதம் எடுத்த ஆஸ்திரேலிய அணியின் டிராவஸ் ஹெட் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார் . இந்திய அணியின் இந்தப் படுதோல்வி கிரிக்கெட் ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது .

- Advertisement -

நிச்சயமாக இந்த முறை கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 209 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய தோல்வியை பெற்றிருப்பது ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்களையும் முன்னாள் கிரிக்கெட் வீரர்களையும் கோபம் கொள்ள செய்து இருக்கிறது .

ஆஸ்திரேலியா அணியுடன் ஆன தோல்வியிலிருந்து மீள்வதற்குள் இந்திய வீரர்களுக்கு மற்றொரு பேர் இடியான சம்பவம் நடைபெற்று இருக்கிறது . இந்திய அணி இந்த டெஸ்ட் போட்டியில் தாமதமாக பந்து வீசியதாக கூறி விளையாடி அனைத்து வீரர்களுக்கும் 100% கட்டணத்தை அபராதமாக விதித்திருக்கிறது ஐசிசி .

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் விதிமுறைப்படி ஒரு ஓவரை தாமதமாக வீசினால் விளையாடிய வீரர்களுக்கு அவர்களது போட்டி கட்டணத்தில் இருந்து 20% அபராதம் ஆக வசூலிக்கப்படும் . இந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா ஐந்து ஓவர்களை தாமதமாக வீசி இருப்பதால் போட்டியில் விளையாடிய அனைத்து வீரர்களுக்கும் 100% அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது .

- Advertisement -

இந்த அபராதத்தால் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பது இந்திய அணியின் வீரர் அஜிங்கியா ரகானே தான் . ஏறக்குறைய 19 மாதங்களுக்குப் பிறகு இந்திய அணிக்கு திரும்பியிருக்கும் இவர் இந்த டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் . முதல் இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடிய அவர் 89 ரண்களையும் இரண்டாவது இன்னிங்ஸில் 46 ரன்களையும் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

இந்தப் போட்டியில் பங்கு பெற்றதற்காக அஜிங்கரமான விற்கு எந்த ஒரு சம்பளமும் கிடைக்காது என்பது தான் அதிர்ச்சியான செய்தியாக இருக்கிறது . இந்தப் போட்டியில் அவருக்கான கட்டணம் 100% அபராதத்தின் காரணமாக வழங்கப்படாது . மேலும் அவர் பிசிசிஐ ஒப்பந்தத்திலும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது . கடந்த ஆண்டு அணியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு 2022-23 ஆண்டிற்கான வீரர்கள் ஒப்பந்தத்தில் இருந்து ரகானே பெயரை நீக்கியது பிசிசிஐ நிர்வாகம் .

இதன் காரணமாக அவருக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் போட்டியில் ளந்த ஒரு வருமானமும் கிடைக்காது நடந்து முடிந்த ஐபிஎல் தொடர்களில் இருந்தே அவரது ஆட்டம் மிகச் சிறப்பாக இருந்து வருகிறது . அந்த பார்மை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் தொடர்ந்தார் ரகானே . இதன் காரணமாக நடைபெற இருக்கும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டிரஸ்ட் போட்டியிலும் அவர் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது .