ஐபிஎல் KKR அணிக்கு யாரும் எதிர்பார்க்காத கேப்டன்.. எல்லாம் தோனி செய்த காரியம்.. ரசிகர்கள் கருத்து

0
263
Rahane

2025 ஆம் ஆண்டு 18வது ஐபிஎல் சீசனுக்கு கேகேஆர் அணி நிர்வாகம் தங்கள் அணிக்கு யாரும் எதிர்பார்க்காத ஒரு வீரரை புதிய கேப்டனாக அறிவித்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. இதற்கு பின்னணியில் மகேந்திர சிங் தோனி இருக்கிறார் என ரசிகர்கள் புகழ்ந்து வருகிறார்கள்.

கடந்த ஆண்டு ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் கேகேஆர் அணி ஐபிஎல் தொடரை வென்றது. இருந்தபோதிலும் கூட அவரை அந்த அணி நிர்வாகம் மெகா ஏலத்திற்கு தக்க வைக்கவில்லை. ஏலத்தில் ஸ்ரேயாஸ் ஐயரை பஞ்சாப் கிங்ஸ் அணி வாங்கி கேப்டனாக ஏற்கனவே அறிவித்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

கேகேஆர் அணியில் கேப்டன்களுக்கான போட்டி

இந்த நிலையில் கேகேஆர் அணி மெகா ஏலத்தில் வெங்கடேஷ் ஐயரை வாங்கி இருந்தது. மேலும் அந்த அணியில் மூத்த வீரர்களாக சுனில் நரைன் மற்றும் ரசல் இருவரும் இருந்து வருகிறார்கள். எனவே இவர்களில் யாருக்காவது கேப்டன் பதவி செல்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்று கருதப்பட்டது.

மிகக்குறிப்பாக 20 கோடி ரூபாய் தாண்டி வெங்கடேஷ் ஐயரை கேகேஆர் மெகா ஏலத்தில் வாங்கியது. எனவே அவரை புதிய கேப்டனாக அந்த அணி நிர்வாகம் அறிவிக்கும் என பரவலாக கூறப்பட்டது. கிரிக்கெட் வல்லுனர்களும் அப்படியே கருத்து தெரிவித்து வந்திருந்தார்கள். ஆனால் தற்போது கே
கேஆர் அணி நிர்வாகம் மாற்றி யோசித்து இருக்கிறது.

- Advertisement -

யாரும் எதிர்பார்க்காத கேப்டன்

இந்த நிலையில் கேகேஆர் அணி நிர்வாகம் ரகானேவை தங்கள் அணியின் புதிய கேப்டனாக அறிவித்திருக்கிறது. மேலும் துணை கேப்டனாக வெங்கடேஷ் ஐயரை அறிவித்திருக்கிறது. ரகானே ஏற்கனவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை கேப்டனாக இருந்து வழிநடத்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் உள்நாட்டு ரஞ்சி தொடரில் கடந்த ஆண்டில் மும்பை அணிக்கு கேப்டனாக இருந்து சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தார்.

இதையும் படிங்க : மச்சான்.. விழுந்த இடத்திலேயே, எழுந்துவிட்டாய்.. வருண் சக்கரவர்த்தியை பாராட்டிய சூர்யகுமார்

மேலும் சிஎஸ்கே அணி நிர்வாகம் தோனியின் விருப்பத்தின் பேரில் அவரை கடந்த முறை அடிப்படை விலைக்கு வாங்கியிருந்தது. மேலும் அவரை மூன்றாவது இடத்திலும் துவக்க இடத்திலும் களம் இறக்கிவிட்டு அவருடைய இயல்பான ஆட்டத்தை விளையாடும் படி கூறியது. இதன் காரணமாக அவர் கொஞ்சம் அதிரடியாக விளையாடினார். இதனால் அவருக்கு இந்திய டெஸ்ட் அணியிலும் இழந்த இடம் கிடைத்தது. தற்போது அவருக்கு இதன் காரணமாகவே கேகேஆர் அணியில் கேப்டன் பதவியே கிடைத்திருக்கிறது. இதன் பின்னணியில் மகேந்திர சிங் தோனி அவரை சிஎஸ்கே அணிக்காக தேர்வு செய்து அவரது இயல்பில் விளையாடவிட்டதுதான் காரணம் என ரசிகர்கள் புகழ்ந்து வருகிறார்கள்.

- Advertisement -