8 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வந்த அஜிங்கிய ரஹானேவின் சாதனை ஒரு நொடியில் உடைந்தது

0
2140
Ajinkiya Rahane

இந்திய மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி தற்போது பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சிறிய தசை பிடிப்பு காரணமாக விராட் கோலி இன்றைய டெஸ்ட் போட்டியில் களம் இறங்கவில்லை. அவருக்கு பதிலாக இன்றைய போட்டியில் கேஎல் ராகுல் இந்திய அணியை தலைமை தாங்குகிறார். போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

28 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 57 ரன்கள் மட்டுமே குவித்து இந்திய அணி சிக்கலான நிலையில் தற்போது விளையாடி கொண்டிருக்கிறது. ஓபனிங் பேட்ஸ்மேன் மயங்க் அகர்வால் 26 ரன்களிலும், புஜாரா 3 ரன்களிலும், ரஹானே ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆகி உள்ளனர். கேஎல் ராகுல் 19 ரன்களிலும், ஹனுமா விஹாரி 8 ரன்களிலும் தற்பொழுது களத்தில் பேட்டிங் செய்து கொண்டிருக்கின்றனர்.

- Advertisement -

81வது டெஸ்ட் போட்டியில் முதல் முறையாக கோல்டன் டக் அவுட் ஆன அஜிங்கிய ரஹானே

கிரிக்கெட் போட்டியில் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனால் அது டக் அவுட் என்று அழைக்கப்படும். அதிலும் குறிப்பாக ஒரு பேட்ஸ்மேன் தான் மேற்கொள்ளும் முதல் பந்திலேயே ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனால், அந்த விக்கெட்டை கோல்டன் டக் அவுட் என்று அழைப்பார்கள். இன்று ரஹானே முதல் பந்திலேயே ரன் எதுவும் எடுக்காமல் கோல்டன் டக் அவுட் முறைப்படி தனது விக்கெட்டை பறிகொடுத்து உள்ளார்.

2013ம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அஜிங்கிய ரஹானே விளையாடி வருகிறார். இந்த போட்டிக்கு முன்பு வரை 80 டெஸ்ட் போட்டிகளில் 4863 ரன்கள் தன்னுடைய டெஸ்ட் கேரியரில் அவர் குவித்திருக்கிறார். இந்த 80 டெஸ்ட் போட்டிகளில் ஒருமுறைகூட அவர் கோல்டன் டக் அவுட் ஆகியதில்லை. ஆனால் இன்று தன்னுடைய 81ஆவது டெஸ்ட் போட்டியில் துரதிஸ்டவசமாக அவர் கோல்டன் டக் அவுட் ஆகியுள்ளார்.

இதன் மூலமாக சுமார் எட்டு ஆண்டுகளுக்கு மேலாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வரும் அவர் இன்று முதல் முறையாக கோல்டன் டக் அவுட் ஆகி உள்ளார். டெஸ்ட் கேரியரில் கோல்டன் டக் அவுட் ஆகாமல் இருந்து வந்த அவரது அந்த சாதனை இன்று இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஒரு நொடியில் உடைந்து போனது.

- Advertisement -

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வென்று, டெஸ்ட் தொடரை கைப்பற்றி தென்னாப்பிரிக்க மண்ணில் வரலாற்று சாதனை படைக்குமா என்கிற ஏக்கத்தில் தற்பொழுது இந்திய ரசிகர்கள் பதைபதைப்புடன் டெஸ்ட் போட்டியை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.