இந்த ஆண்டு சிஎஸ்கே அணி எந்த வீரர்களை தக்க வைக்கும் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா கூறியிருக்கிறார்.
மேலும் இந்த முறை இந்திய அணிக்கு விளையாடி 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகி இருக்கும் வீரர்கள் அன் கேப்டு பட்டியலில் வருவார்கள் என்பதால் மகேந்திர சிங் தோனியும் இந்த பட்டியலில் இணைவார். இதனால் தோனியை இந்த வகையில் வெறும் நான்கு கோடிக்கு வாங்க முடியும்.
நிச்சயமாக தோனி முதல் வீரராக இருப்பார்
இந்த நிலையில் சிஎஸ்கே அணி நிர்வாகம் ஆறு வீரர்களில் எத்தனை வீரர்களை தக்க வைக்கும்? யாரை என்ன மாதிரியான இடங்களில் தக்க வைக்கும்? மகேந்திர சிங் தோனியை முதல் அல்லது இரண்டாவது வீரராக சிஎஸ்கே அணி நிர்வாகம் தக்க வைக்குமா? என்பது குறித்து அஜய் ஜடேஜா விளக்கம் அளித்திருக்கிறார்.
இது குறித்து அஜய் ஜடேஜா கூறும்பொழுது ” நிச்சயமாக சிஎஸ்கே தக்கவைக்கப்படுவதில் உறுதியான வீரர் தோனி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர் தற்பொழுது அன் கேப்டு வீரராக இருக்கிறார். புதிய அணியை உருவாக்குவதற்காக தோனி தன்னை முதல் அல்லது இரண்டாவது வீரராக தக்க வைக்க சம்மதிக்க மாட்டார். தொடர்ந்து அவர் இதை செய்து வந்திருக்கிறார். எனவே அவர் அன் கேப்டு வீரராகவே வருவார்”
மற்ற மூன்று வீரர்கள்
மேலும் பேசிய அஜய் ஜடேஜா ” கேப்டன் ருதுராஜ் கடந்த வருடத்தில் மிகவும் சிறப்பாக இருந்திருக்கிறார். எனவே அவரும் சிஎஸ்கே தக்க வைக்கும் விருப்பத்தில் முக்கியமானவராக இருப்பார். நிச்சயமாக ஜடேஜாவை அவர்கள் வெளியில் விட மாட்டார்கள். எனவே மூன்றாவது வீரராக அவரும் அணியில் இருப்பார்”
இதையும் படிங்க : ஜெய் ஷா நான் பல வருஷமா சொன்னேன்.. இப்ப அதை ஐபிஎல்ல கொண்டு வந்து இருக்கிங்க சூப்பர் – இர்பான் பதான் கருத்து
“மேலும் அவர்கள் பதிரனாவை விட்டு வெளியேற மாட்டார்கள். சிஎஸ்கே தக்க வைக்கும் வெளிநாட்டு வீரராக நான் அவரை பார்க்கிறேன். நீங்கள் ஒரு வீரரை தக்க வைப்பது பணத்திற்காக கிடையாது அவர்களுடைய விளையாடும் பாணியால்தான். எனவே இந்த நால்வரும் அவர்களின் முக்கியமான வீரர்களாக இருப்பார்கள். மேலும் இருவரை ஆர்டிஎம் மூலம் எடுப்பதற்கு முயற்சி செய்வார்கள்” என்று கூறியிருக்கிறார்.






