ஜெய் ஷா நான் பல வருஷமா சொன்னேன்.. இப்ப அதை ஐபிஎல்ல கொண்டு வந்து இருக்கிங்க சூப்பர் – இர்பான் பதான் கருத்து

0
41
Irfan

இன்று இந்திய கிரிக்கெட் வாரியம் அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்திற்கு புதிய விதிகளை கொண்டு வந்து அறிவித்திருக்கிறது. இதில் அறிவிக்கப்பட்டிருக்கும் ஒரு புதிய விதி குறித்து இந்திய முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் பாராட்டி இருக்கிறார்.

உலக கிரிக்கெட்டில் இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தும் ஐபிஎல் டி20 லீக் புதிய உச்சங்களை எட்டி வருகிறது. எனவே தொடரை சுவாரசியப்படுத்துவதோடு, தொடரை மிகவும் கட்டுப்பாடாக நடத்தவும் விதிகள் அவசியமாக இருக்கிறது. இதை உணர்ந்து ஒரு விதியை ஐபிஎல் தொடரில் இந்திய கிரிக்கெட் வாரியம் அமல்படுத்தி இருக்கிறது.

- Advertisement -

2025 ஐபிஎல் மெகா ஏல விதிகள்

இந்த முறை ஆறு வீரர்களை தக்க வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டிருக்கிறது. அதில் அதிகபட்சமாக இரண்டு அன் கேப்டு வீரர்கள் இருக்கலாம். மேலும் தக்கவைக்கப்படும் வீரர்கள் இந்திய வீரர்களா அல்லது வெளிநாட்டு வீரர்களா? என்பதில் பிரச்சனை கிடையாது. மேலும் தன் அணியிலிருந்து யாரையும் தக்க வைக்காமல் ஆறு வீரர்களை ஆர்டிஎம் மூலமாகவும் எடுக்கலாம்.

உதாரணமாக சிஎஸ்கே கழட்டிவிடும் சிவம் துபேவை மும்பை 8 கோடிக்கு வாங்கினால், சிஎஸ்கே அவரை 8 கோடிக்கு அங்கிருந்து அப்படியே வாங்க முடியும். இதுதான் ஆர்டிஎம் முறை.ஆனால் தற்பொழுது இந்த முறையில் ஒரு சிறிய மாற்றமாக, மும்பை அங்கிருந்து எத்தனை கோடி அதிகமாக தர விரும்புகிறது என்று கூறலாம். அதையும் சேர்த்து கொடுத்து சிஎஸ்கே வாங்க முடிந்தால் வாங்கலாம் இல்லை மும்பையே வாங்கிக் கொள்ளும்.

- Advertisement -

வீரர்களுக்கு அதிரடி தடை

இந்த நிலையில் மிக முக்கியமாக ஐபிஎல் ஏலத்தில் வாங்கிய பிறகு, விலை குறைவாக இருந்து தொடரில் விளையாட முடியாது என வீரர்கள் விலகினால், அவர்கள் அடுத்த இரண்டு ஆண்டுகளும் ஐபிஎல் தொடரில் விளையாட முடியாத படி தடை விதிக்கப்படுகிறது. இந்த புதிய விதி தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதை வரவேற்று இர்பான் பதான் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க : வங்கதேச டி20.. ரிங்கு சிங் அந்த வீரர் கூட ஓபனிங் வருவார்.. இப்படியொரு காரணம் இருக்கு – சபா கரீம் பேட்டி

இதுகுறித்து இர்பான் பதான் பேசும் பொழுது “கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் இது குறித்து தொடர்ந்து பேசி வருகிறேன். தற்பொழுது இந்திய கிரிக்கெட் வாரியம் எடுத்திருக்கும் முடிவு எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஏலத்தில் எடுக்கப்பட்ட பிறகு விளையாட முடியாது என அறிவிக்கப்படும் வீரர்கள் இனி தடை செய்யப்படுவார்கள். ஐபிஎல் தொடர் பல வழிகளில் வலுவடைந்து வருகிறது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -