சூர்யா என்ன சொல்றீங்க.. அப்ப இதுக்கு முன்னாடி உங்க டீம்ல எப்படி இருந்திங்க?.. அஜய் ஜடேஜா விமர்சனம்

0
398

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் முழுவதுமாக வெற்றி பெற்றுள்ளது. கௌதம் கம்பீர் மற்றும் சூரியகுமார் யாதவ் கூட்டணி முதல் தொடரையே வெற்றிகரமாக ஆரம்பித்திருக்கின்றனர்.

இந்த சூழ்நிலையில் மூன்றாவது போட்டிக்குப் பிறகு சூரியகுமார் யாதவ் அளித்த பேட்டி இந்திய அணியின் முன்னாள் வீரர்களான அஜய் ஜடேஜா மற்றும் நெக்ரா ஆகியோரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

- Advertisement -

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி டி20 உலக கோப்பையை வென்ற பிறகு அவர் டி20 ஃபார்மெட்டில் இருந்து ஓய்வு பெற, அதற்கு பிறகு சூரியகுமார் யாதவ் கேப்டனாக பொறுப்பேற்றார். தனது முதல் டி20 தொடரையே இலங்கை அணிக்கு எதிராக மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று தங்களது புதிய அத்தியாயத்தை தொடங்கி இருக்கிறார்.

இந்த நிலையில் டி20 தொடர் முடிந்து பேசிய சூரியகுமார் யாதவ் ஒரு போட்டி அல்லது தொடரை வென்று முடித்தால் மட்டுமே நாங்கள் ஒரு அணியாக உட்கார்ந்து பேசி மகிழ்வது இல்லை. ஆட்டத்தின் முடிவு வெற்றி தோல்வி என எதுவாக இருப்பினும் நாங்கள் அனைவரும் ஒன்றாக அமரும் பழக்கத்தை கடந்த உலகக்கோப்பை தொடங்கினோம். இதனால் நாங்கள் இரண்டு பேர் அல்லது மூன்று பேர் கொண்ட குழுக்களாக உட்காருவதில்லை.

- Advertisement -

இந்த பழக்கம் களத்தில் சக வீரர்கள் நட்பாக இருக்கவும், ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருக்கவும் பெரிதும் உதவி புரிகிறது என்று கூறி இருக்கிறார். அதாவது அனைவரும் ஒரு அணியாக உட்கார்ந்து பழக்கம் இந்த டி20 உலக கோப்பையில் இருந்துதான் தொடங்கியது என்று கூறியிருக்கிறார். அவரது இந்த பேட்டி இந்திய அணியின் முன்னாள் வீரர்களான அஜய் ஜடேஜா மற்றும் நெக்ரா ஆகியோரை ஆச்சரியத்துக்கு உள்ளாக்கி இருக்கிறது.

இது பற்றி ஜடேஜா கூறும்போது “ஒரு குழுவாக விளையாடும் விளையாட்டில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து ஆலோசிப்பதே பெரும்பாலும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இன்று வீரர்கள் அதை பற்றி பேசியது ஆச்சரியம் அளிக்கும் வகையில் உள்ளது. அப்போது இதற்கு முன்னர் யாரும் அது போன்று ஒன்றாக அமர்ந்ததில்லையா? என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் இந்த விஷயம் பழையதாக இருந்தாலும் கேப்டன் சூரியகுமார் யாதவ் இப்போதுதான் கொண்டு வந்திருப்பதாக கூறி இருக்கிறார்” என்று கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க:ஐபிஎல்ல சில ஃபாரின் பிளேயர்ஸ் ரொம்ப பண்றாங்க.. இத மட்டும் செய்யுங்க.. அணி முதலாளிகள் கோரிக்கை – வெளியான தகவல்கள்

இதற்கு பதில் அளித்த நெக்ரா “சூரியகுமார் இந்த மாற்றம் டி20 உலக கோப்பையின் போது தான் நிகழ்ந்திருக்கிறது என்று அவர் கூறவில்லையா? அதாவது ஒரு மாதத்திற்கு முன்பு தான் ஏற்பட்டிருக்கிறது” என்று கூற, இதற்கு பதில் அளித்த ஜடேஜா “நான் அவரை சந்தேகிக்கவில்லை ஆனால் இந்த மாற்றம் இப்போதுதான் தொடங்கி இருக்கிறது என்று அவர் கூறியது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது” என்று கூறி முடித்தார்.

- Advertisement -