கம்பீர் பண்ற இந்த விஷயம் சரியில்ல.. பெரிய மேட்ச்ல நிச்சயம் அடி வாங்க போறாங்க – அஸ்வின் எச்சரிக்கை

0
42
Ashwin

நேற்று அணிக்கு எதிராக கம்பீர் அமைத்த பிளேயிங் லெவனில் தனக்கு உடன்பாடு இல்லை எனவும், இந்த அணியில் ஒரு முக்கிய மாற்றத்தை செய்ய வேண்டும் எனவும் ரவிச்சந்திரன் அஸ்வின் எச்சரிக்கை செய்திருக்கிறார்.

இந்திய அணி நேற்று ஆசியக் கோப்பை தொடரில் முதல் போட்டியில் யுஏஇ அணிக்கு எதிராக 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதே சமயத்தில் மூன்றாவது வேகப் பந்துவீச்சாளர் இடத்தில் சிவம் துபே இடம் பெற்றார். அர்ஸ்தீப் சிங் விளையாட வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

- Advertisement -

ஆச்சரியமா இருக்கு

2024 டி20 உலகக் கோப்பை தொடரில் அதிக விக்கெட் கைப்பற்றிய அர்ஸ்தீப் சிங் நீக்கப்பட்டு இருப்பது பெரிய சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது. இது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் வெளிப்படையாகவே தன்னுடைய விமர்சனத்தையும் எச்சரிக்கையையும் கொடுத்து இருக்கிறார்.

இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்பொழுது “அர்ஸ்தீப் இல்லாதது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. இது புதிய விஷயம் கிடையாது. கம்பீர் பயிற்சியாளர் பொறுப்புக்கு வந்ததிலிருந்து இது நடக்கிறது. அர்ஸ்தீப் முழு சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் விளையாடவில்லை. இது ஒரு தீம். இந்திய அணி நிர்வாகம் துபாயில் சுழல் பந்துவீச்சாளர்களை விரும்புகிறது”

- Advertisement -

இதில் சந்தேகம் இருக்கு

“டி20 உலகக் கோப்பை வரையில் நாம் பார்க்கப் போகின்ற தீம் இதுதான். ஆனால் பெரிய அணிகளுக்கு எதிராக இந்த காம்பினேஷன் சிறப்பாக செயல்படுமா என்பது சந்தேகத்தை கொடுக்கிறது. இது மிகவும் ஆபத்தானது. அர்ஸ்தீப் பெரிய ஆட்டக்காரர். டி20 உலகக் கோப்பையில் அவர் மிகச் சிறப்பாக செயல்பட்டார். இது போன்ற ஒரு வீரரை தொடர்ந்து வெளியில் வைத்திருப்பது கடினம்”

இதையும் படிங்க : பவுலிங்ல மோர்கல் 2 டிப்ஸ் கொடுத்திருக்காரு.. கம்பீர் சூர்யா என்னை விரும்புவது இப்படித்தான் – ஷிவம் துபே பேட்டி

“இப்படியான அணிவுடன் சென்றால் மீதமுள்ள பந்துவீச்சாளர்களை குறி வைத்து அடிப்பார்கள். அந்த வெற்றிடத்திற்கு உங்களுக்கு ஒரு நல்ல பந்துவீச்சாளர் தேவை. டி20 உலகக் கோப்பைக்கு இன்னும் கொஞ்சம் தூரம் இருக்கிறது. நீங்கள் இதை சரி செய்யாவிட்டால் பிறகு பிரச்சினையாகி விடும்” என்று எச்சரிக்கை செய்திருக்கிறார்.

- Advertisement -