நேற்றைய போட்டியில் லக்னோ வீரர் ஜிக்வேஷ் ரதி மற்றும் ஹைதராபாத் வீரர் அபிஷேக் ஷர்மா இருவர் இடையில் சண்டை வந்ததற்கான முக்கிய காரணம் குறித்து முகமது கைஃப் பேசி இருக்கிறார்.
இந்த போட்டியில் 20 பந்தில் அதிரடியாக 59 ரன்கள் எடுத்த அபிஷேக் ஷர்மா ஜிக்வேஷ் ரதி பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். இது தொடர்ந்து அவர் தனது வழக்கமான நோன்பு செலிப்ரேஷனில் ஈடுபட, இருவருக்கும் இடையில் வாய் தகராறு ஏற்பட்டு அது போட்டியில் விளையாட தடை அளவுக்கு சென்று இருக்கிறது.
களத்தில் என்ன நடந்தது?
நேற்றைய போட்டியில் லக்னோ அணி 25 ரன்கள் குவித்த பொழுதும் கூட, அபிஷேக் ஷர்மா ஹைதராபாத் அணிக்கு 20 பந்தில் 59 ரன்கள் அதிரடியாக ஆரம்பத்தில் எடுத்ததால் அந்த அணிக்கு வெற்றி எளிதாக அமைந்தது. இதன் காரணமாக 18 ஓவரில் நான்கு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 6 வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் அபிஷேக் ஷர்மா ஏறக்குறைய சிறப்பான முறையில் பேட்டிங் செய்து ஆட்டம் இழந்த போதும் கூட, அதைப் பெரிய வெற்றி போல ஜிக்வேஷ் ரவி கொண்டாடியது அபிஷேக் ஷர்மாவுக்கு கோபத்தை உண்டாக்கியது. இதன் காரணமாக அவர் தன் தலைமுடியில் கை வைத்து தூக்கி காட்டி ஏதோ கூறினார். இதற்குப் பிறகு இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட நடுவர் வந்து தீர்த்து வைத்தார். மேலும் போட்டி முடிந்து கடைசியில் இருவரும் சமாதானமானார்கள்.
அபிஷேக் கூறியது இதுதான்
இதுகுறித்து முகமது கைஃப் பேசும்பொழுது “சண்டையில் இந்த பகுதியை நான் முதல்முறையாக பார்த்தேன். அபிஷேக் ஷர்மா ஜிக்னேஷ் ரதியை பார்த்து உன் தலை முடியை பிடித்து இழுத்து விடுவேன் என்று சொல்வதாக எனக்குத் தெரிந்தது. ஆனால் இதுபோல அபிஷேக் ஷர்மா நிதானத்தை இழந்து நான் பார்க்கவில்லை. ஜிக்வேஷ் ரதி கொண்டாட்டம் என்பது பேட்ஸ்மேன்கள் விரும்பாதது. மேலும் நேற்றைய போட்டியில் அபிஷேக் சிறப்பாக விளையாடிதான் இருந்தார். அதனால்தான் கோபப்பட்டு விட்டார்”
இதையும் படிங்க : LSG திக்வேஷ் ரதிக்கு ஆட தடை.. சேர்ந்து அபிஷேக்கும் சிக்கினார்.. உண்மையில் என்ன நடந்தது?
“இயல்பாகவே அபிஷேக் ஷர்மா ஆக்ரோஷமான வீரர்தான். அவர் சதம் அடித்த பொழுது பேப்பர் எடுத்துக்காட்டி கொண்டாடினார். ஆனால் இந்த அளவுக்கு ஆக்ரோஷம் அடையக்கூடிய வீரர் கிடையாது. இதற்கு முக்கிய காரணம் நேற்று அவர் சிறப்பாக விளையாடி இருந்த பொழுதும் ஜிக்வேஷ் அந்த கொண்டாட்டத்தில் ஈடுபட்டதுதான். இறுதியாக இரண்டு இந்திய வீரர்களும் சமாதானம் செய்து கொண்டது பார்க்க நன்றாக இருந்தது” என்று கூறியிருக்கிறார்.