“முகத்த டெரரா வச்சிக்கிட்டா போதாது பர்பாமும் பண்ணனும்” – இந்திய நட்சத்திர வீரர்களை அதிரடியாய் தாக்கிய கங்குலி!

0
447
Ganguly

2011ஆம் ஆண்டு மகேந்திர சிங் தோனி தலைமையில் ஒருநாள் உலகக்கோப்பையை இந்திய அணி வென்றதற்கு பிறகு உலகக் கோப்பையை இதுவரை இந்திய அணி வெல்லவில்லை.

மேலும் 2013ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடத்த சாம்பியன்ஸ் டிராபியை வென்ற பிறகு ஐசிசி நடத்தும் எந்த ஒரு தொடரையும் இந்திய அணி வெல்லவில்லை.

- Advertisement -

சமீபத்தில் கடந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலகக்கோப்பை மற்றும் இந்த மாதம் இங்கிலாந்தில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இரண்டிலும் இந்திய அணி தோற்று வெளியேறியது.

ஐசிசி உலகக்கோப்பை தொடர்களில் இந்திய அணியின் மோசமான செயல்பாடு குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் வீரருமான, முன்னாள் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவருமான சவுரவ் கங்குலி முக்கியமான கருத்துக்களைத் தெரிவித்து இருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும்பொழுது
“இந்திய அணி வீரர்களிடம் ஆக்ரோஷம் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் உங்களுக்கு செயல்திறன் தேவை. 2001 முதல் 2006 வரையிலான இந்திய அணியைப் பார்த்தால் சிட்னி, பிரிஸ்பேன், நாட்டிங்ஹாம், ஓவல் என பெரிய மைதானங்களில் 500, 600 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் எதிரணியை அழுத்தத்திற்கு உள்ளாக்கியது.

- Advertisement -

எனவே இந்திய அணி இப்படி செய்யவேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன். கிரிக்கெட் 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்து மாறிவிட்டது. இப்பொழுது சூழ்நிலைகள் மற்றும் ஆடுகளங்கள் மாறி இருக்கின்றன. ஆனால் இதற்கு ஏற்றபடி இந்தியா முதல் இன்னிங்ஸில் 350, 400 ரன்கள் எடுத்த பார்க்க வேண்டும்.

இந்த அணிக்கு நம்பிக்கை இல்லை என்பதை நான் ஏற்கவில்லை. 2021ல் இங்கிலாந்திலும், ஆஸ்திரேலியாவிலும் நாம் மிக நம்பிக்கை உடன் தைரியமாகவே விளையாடினோம். ஆஸ்திரேலியாவில் ரிஷப் பண்ட் நமக்காகத் தொடரை வென்றார். இதெல்லாம் நம்பிக்கையுடன் விளையாடினால் மட்டுமே நடக்கும் என்பதை நாம் உணர வேண்டும்.

இவர்கள் நிறைய கிரிக்கெட் விளையாடுகிறார்கள். அதனால் நிறைய பயணம் செய்கிறார்கள். இதெல்லாம் கொஞ்சம் பின்னோக்கி இழுக்கவே செய்யும். எனவே அவர்கள் இதையெல்லாம் கொஞ்சம் முன்னோக்கி எடுத்து வரவேண்டும். இது முற்றிலும் சாத்தியம் என்று நினைக்கிறேன்!” என்று கூறியுள்ளார்!