சஞ்சு சம்சனுக்கு எதிரா நாங்க தனியாவே இப்படி ஒரு திட்டத்தை வைச்சிருந்தோம் – வெஸ்ட் இண்டீஸ் வீரர் வெளியிட்ட மாஸ் பிளான்!

0
993
Samson

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் செய்து இருந்த இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி 2006 ஆம் ஆண்டுக்குப் பிறகு 17 வருடங்கள் கழித்து தற்பொழுது ஒரு தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் இழந்திருக்கிறது!

ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரின் கடைசி மற்றும் ஐந்தாவது டி20 போட்டி நேற்று இரு அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இரண்டு அணிகளும் நடந்து முடிந்த நான்கு போட்டிகளில் தலா இரண்டு போட்டிகளை வென்று இருந்த காரணத்தால், இந்தப் போட்டி தொடரை யாருக்கென்று முடிவு செய்யும் போட்டியாக அமைந்திருந்தது.

- Advertisement -

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஆரம்ப 10 ஓவர்களை நன்றாக விளையாடி, கடைசி 10 ஓவர்களை சரியாக விளையாடாமல் ஒன்பது விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் 20 ஓவர்களில் சேர்த்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் மிகச் சிறப்பாக பந்து வீசிய ரொமாரியோ ஷெப்பர்ட் நான்கு ஓவர்கள் பந்து வீசி 31 ரன்கள் தந்து நான்கு விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார்.

இலக்கை நோக்கி தொடர்ந்து விளையாடிய வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு துவக்க ஆட்டக்காரர் பிரண்டன் கிங் 55 பந்துகளில் 85 ரன்கள் என மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த 18 ஓவர்களின் எளிதாக இந்திய அணியை வென்று தொடரை கைப்பற்றி அசத்தியது.

இந்த போட்டியில் மிகச் சிறப்பாக பந்து வீசி முக்கியமான நேரத்தில் சஞ்சு சாம்சன் மற்றும் ஹர்திக் பாண்டியா விக்கட்டுகளை வீழ்த்தியும், இறுதியில் அர்ஸ்தீப் மற்றும் குல்தீப் விக்கெட்டுகளை வீழ்த்தியும், போட்டியில் தாக்கத்தை உண்டாக்கிய ரொமாரியோ ஷெப்பர்டுக்கு ஆட்டநாயகன் விருது தரப்பட்டது.

- Advertisement -

ஆட்டநாயகன் விருது வென்ற அவர் பேசும் பொழுது ” நாங்கள் வெற்றிப் பக்கத்தில் முடிவடைந்ததால் இது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. எனவே சிறப்பாக விளையாடிய நிக்கோலஸ் பூரன் மற்றும் பிரண்டன் கிங் இருவருக்கும் எனது நன்றிகள். ஒருநாள் தொடரில் இருந்து தற்பொழுது வரை நான் பந்துவீச்சில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறேன்.

பவுலிங் திட்டத்தில் மிகக் குறிப்பாக சஞ்சு சாம்சனுக்கு ஆடுகளத்தில் பந்தை அடித்து வீசுவதும், சூரிய குமாருக்கு அவர் பந்தை தரையோடு அடிக்குமாறு வீசுவதும் எங்களது முக்கிய திட்டமாக இருந்தது.

கடந்த இரண்டு மாதம் எங்களுக்கு மிகவும் ஒரு கடினமான காலக்கட்டம். இப்படியான ஒரு நேரத்தில் இந்தியா போன்ற ஒரு பெரிய அணிக்கு எதிராக நாங்கள் பெற்றுள்ள வெற்றி எங்களுக்கும் எங்களது ரசிகர்களுக்கும் மிகுந்த அர்த்தத்தை கொடுப்பதாக இருக்கிறது! என்று மிகவும் நெகிழ்ச்சியோடு கூறி இருக்கிறார்!