“இந்தியாவுக்கு எதிரான திட்டம் ரெடி.. என் பிளான் இதுதான்.. கோலி விக்கெட் எனக்குத்தான்!” – இந்திய வம்சாவளி நெதர்லாந்து வீரர் அதிரடி பேட்டி!

0
654
Virat

இந்தியாவில் நடைபெற்று வரும் 13ஆவது ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை தொடர் தற்பொழுது மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் நடைபெற்று வருகிறது. அரையிறுதிக்குத் தகுதி பெறும் நான்கு அணிகள் யார் என்பதில் கடைசி இடத்திற்கு தற்பொழுது சிறந்த போட்டி அமைந்திருக்கிறது.

இந்த உலகக்கோப்பை தொடரை எடுத்துக் கொண்டால் ஆப்கானிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளின் செயல்பாடுகள்தான், தற்போது உலகக்கோப்பை தொடருக்குள் ஏற்பட்டிருக்கும் பரபரப்பிற்கும் விறுவிறுப்பிற்கும் காரணமாக அமைந்திருக்கிறது.

- Advertisement -

இந்த இரு அணிகளும் சில முக்கிய அணிகளை வீழ்த்தியிருக்காவிட்டால், நடப்பு உலகக்கோப்பையில் எந்தவித சுவாரசியமும் ரசிகர்களுக்கு இருந்திருக்காது. எந்த நான்கு அணிகள் மேலே சென்றதோ அந்த அணிகள் தொடர்ச்சியாக அப்படியே பயணித்திருக்கும்.

ஆப்கானிஸ்தான் அணி இங்கிலாந்து பாகிஸ்தான் இலங்கை என உலகக் கோப்பையை வென்ற மூன்று பெரிய அணிகளை இந்த உலகக் கோப்பை தொடரில் வீழ்த்தி இருக்கிறது. இதேபோல் நெதர்லாந்து அணி தென் ஆப்பிரிக்கா மற்றும் பங்களாதேஷ் அணிகளை வீழ்த்தி இருக்கிறது.

நெதர்லாந்து அணியை பொறுத்தவரை எடுத்துக் கொண்டால், அந்த அணியை இன்னொரு குட்டி நியூசிலாந்து என்று கூறலாம். ஏனென்றால் நெதர்லாந்து அணி நியூசிலாந்து அணியை போலவே ஒவ்வொரு அணிக்கும் ஒவ்வொரு வீரர்களுக்கும் திட்டங்களை தீட்டிக் கொண்டு வந்து விளையாடுகிறது.

- Advertisement -

மேலும் நெதர்லாந்து அணியில் விக்ரம்ஜித் சிங், தேஜா மற்றும் ஆரியன் தத் என மூன்று இந்திய வம்சாவளி வீரர்கள் விளையாடும் அணியில் இடம் பிடித்து விளையாடுகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சுழற் பந்துவீச்சாளர் ஆரியன் தத் கூறும் பொழுது “எனக்கு அனைத்து விக்கெட்டுகளுமே முக்கியமானதுதான். ஆனால் நான் விராட் கோலி விக்கெட்டை வீழ்த்த விரும்புகிறேன். இந்த உலகக் கோப்பையில் அவரது விக்கெட்டை எனக்கு சிறந்த பரிசாக கருதுகிறேன்.

எனது பலத்தை நான் நம்புவதோடு, நான் யாருக்கு எதிராக பந்து வீசுகிறேனோ அந்த பேஸ்மேன்களைப் பற்றி பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. தொடர்ந்து சரியான லென்த்தில் வீசித் தாக்கி, எனது வேகத்தை பயன்படுத்தி, பேட்ஸ்மேன்களை வெளியேற்றுவதில் எனது கவனம் உள்ளது.

இந்தியாவுக்கு எதிராக எங்களிடம் திட்டங்கள் இருக்கிறது. இந்தியா மிகவும் சவாலான ஒரு அணி. அரையிறுதியை நோக்கிய பயணத்தில் எங்கள் அணியில் நாங்கள் அனைவரும் உறுதியாக இருக்கிறோம்!” என்று அதிரடியாக தெரிவித்திருக்கிறார்!