இதே மாதிரி சூழ்நிலையில் சிஎஸ்கேவுக்கு எதிராக செம்மையா பண்ணினார் ; இன்னைக்கு முடியல- சஞ்சு சாம்சன்!

0
2514
Sanjusamson

இன்று ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணியும் ராஜஸ்தான் அணியும் மோதிக்கொண்ட போட்டி மிகவும் பரபரப்பான ஒன்றாக அமைந்தது.

கடைசி ஓவருக்கு 17 ரன்கள் தேவை என்ற நிலையில் அந்த ஓவரை வீசிய சந்திப் சர்மா மிகச் சிறப்பாக வீசி 12 ரன்கள் மட்டுமே தந்து ஓவரை முடித்து விட்டார்.

- Advertisement -

ஆனால் அவர் வீசிய கடைசிப் பந்து நோபாலாக அமைய, அந்தப் பந்தை அவர் மீண்டும் வீச, அதை எதிர்கொண்ட அப்துல் சமத் சிக்ஸருக்கு அடித்து ஹைதராபாத் அணியை வெல்ல வைத்தார்.

இதே சந்திப் சர்மா இதே மாதிரியான சூழலில் தோனி மற்றும் ரவீந்திர ஜடேஜாவை வைத்துக்கொண்டு வெற்றிகரமாக பந்து வீசி ராஜஸ்தான் அணியை வெல்ல வைத்தார். ஆனால் இன்று அது நடக்கவில்லை.

தோல்விக்குப்பின் இது குறித்து பேசிய ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் ” இதைத்தான் ஐபிஎல் உங்களுக்கு வழங்குகிறது. இது போன்ற போட்டிகள் ஐபிஎல் தொடரின் சிறப்பு. நீங்கள் விளையாட்டு முழுதாக முடியாமல் வென்றதாக ஒருபோதும் உணரவே முடியாது. எந்த எதிரணியும் வெல்ல முடியும் என்று எனக்குத் தெரியும்.

- Advertisement -

அவர்கள் நன்றாக பேட்டிங் செய்தார்கள். ஆனால் கடைசி ஓவரை நான் சந்தீப்புக்கு தருவதில் நம்பிக்கையுடன் இருந்தேன். இதே போன்ற சூழ்நிலையில் சிஎஸ்கே அணிக்கு எதிராக அவர் ஆட்டத்தை வென்று தந்திருக்கிறார்.

அவர் இன்று மீண்டும் அதையே செய்தார். ஆனால் அந்த நோபால் எல்லாவற்றையும் நாசமாக்கியது. இந்த விக்கெட்டில் இந்த ஸ்கோரை போட நாங்கள் நல்ல முறையில் பேட்டிங் செய்தோம்.

ஆனால் அவர்கள் விவேகமாக பேட்டிங் செய்தார்கள் என்று நான் நினைக்கிறேன். அவர்கள் பேட்டிங் செய்த விதத்திற்கு அவர்களுக்குப் பெருமை சேர வேண்டும்.

கடைசிப் பந்து நோபால் என்று உணர்ந்த பொழுது, சரி இது நோபால் அடுத்த பந்தை சரியாக வீச வேண்டும் என்று மட்டும்தான் நினைத்தேன். நீங்கள் அதைப் பற்றி அதிகம் சிந்திக்க கூடாது. சந்தீப்புக்கு என்ன செய்வது என்று தெரியும்.

எல்லாம் முடிந்து விட்டது என்றும் நினைக்கும் நேரத்தில் இப்படியானவைகள் மனநிலையில் சில நொடிகள் ஏதாவது மாற்றத்தை உண்டாக்கலாம். எல்லோரும் கொண்டாடவும் செய்யலாம். ஆனால் இந்த விளையாட்டின் இயல்பு இதுதான் என்று நான் நினைக்கிறேன். ஆட்டம் முடியாமல் நீங்கள் லைனை தாண்ட முடியாது!” என்று கூறியிருக்கிறார்!