“சர்பராஸ் கான் யாருனு நல்லா தெரியும்.. ஜெய்ஸ்வால் பற்றி பேச விரும்பல”- வெற்றிக்கு பின் ரோகித் சர்மா பேட்டி

0
1492
Rohit

இளம் வீரர்கள் கொண்ட அணியை வழிநடத்தி இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணியை அபார வெற்றி பெற வைத்திருக்கிறார் கேப்டன் ரோகித் சர்மா.

கேப்டனாக பெரிய அணிக்கு எதிராக இளம் வீரர்களைக் கொண்டு விளையாட வேண்டும் என்கின்ற அழுத்தம் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு இருந்தது. இளம் வீரர்கள் கேப்டன் மேல் இருந்த அழுத்தத்தை நீக்கி இருக்கிறார்கள்.

- Advertisement -

அதே சமயத்தில் மூன்றாவது டெஸ்டில் 434 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றதில், ரோகித் சர்மா கேப்டனாக மட்டுமில்லாமல் பேட்ஸ்மேன் ஆக முதல் இன்னிங்ஸில் 131 ரன்கள் நெருக்கடியான நேரத்தில் குவித்தது மிக முக்கிய காரணமாக இருக்கிறது.

போட்டியில் வெற்றிக்குப் பிறகு கேப்டன் ரோஹித் சர்மா வெற்றிக்கான காரணங்கள் குறித்து நீளமாக பேசியிருக்கிறார். அதில் அவர் “டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் பொழுது அது இரண்டு அல்லது மூன்று நாட்கள் மட்டும் விளையாடுவது இல்லை. தொடர்ந்து ஐந்து நாட்களும் போட்டியில் இருக்க வேண்டும். இங்கிலாந்து சிறப்பான முறையில் விளையாடி அழுத்தம் கொடுத்தது.

ஆனால் பந்துவீச்சு என்று வரும் பொழுது நாங்கள் சிறந்த தரத்தை பெற்று இருக்கிறோம். எனவே நாங்கள் எது நடந்தாலும் அமைதியாக இருக்க வேண்டியது முக்கியம். இல்லையென்றால் போட்டியில் சறுக்கி விடுவீர்கள்.

- Advertisement -

நாங்கள் போட்டியின் மூன்றாவது நாளில் எங்களுடைய திட்டங்களில் மிகச்சரியாக பொருந்தி கொண்டோம். அதில் விஷயங்கள் மிகச் சிறப்பாக நடந்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

முதல் இன்னிங்ஸில் ரவீந்திர ஜடேஜா ஐந்தாம் இடத்தில் வந்ததற்கான காரணம், அவருக்கு அதற்கான பேட்டிங் தரம் இருக்கிறது. மேலும் நாங்கள் ரைட் மற்றும் லெப்ட் காமினேஷனை அமைக்க விரும்பினோம். இது நிரந்தரம் கிடையாது. சூழ்நிலைக்கு தக்கவாறு எடுத்த முடிவு.

சர்பராஸ் கான் தரம் என்னவென்று எங்களுக்கு நன்றாக தெரியும். அவருக்கு நாங்கள் போட்டியில் கொஞ்சம் நேரம் கொடுக்க விரும்பினோம். இந்த காரணத்தினால் அவர் ஜடேஜாவுக்கு அடுத்து விளையாட வந்தார்.

இந்தியாவில் வெற்றி பெறுவதற்கு டாஸ் மிகவும் முக்கியமான ஒரு காரணியாக அமைகிறது. அதேபோல் டாஸ் என்றால் ரன்கள் குவிப்பதும் மிகவும் அவசியம். மேலும் அவர்கள் பந்துவீச்சில் நல்ல நெருக்கடியை எங்களுக்கு உண்டாக்கினார்கள். ஆனால் நாங்கள் அமைதியாக இருந்து செயல்பட்டு ஆட்டத்திற்குள் வந்தோம்.

எங்களுக்கு இரண்டாவது இன்னிங்ஸில் கிடைத்த முன்னிலையை நாங்கள் பெரிதாக்க விரும்பினோம். அதற்கு இரண்டு இளைஞர்களும் மிகச் சிறப்பாக விளையாடினார்கள். ஜடேஜா இரண்டாவது இன்னிங்ஸ் பந்துவீச்சில் மிகச் சிறப்பாக திரும்பி வந்தார்.

இதையும் படிங்க : “நான் இரட்டை சதம் அடிக்க இவங்கதான் காரணம்.. நேத்தே முடிவு பண்ணிட்டேன்” – ஜெய்ஸ்வால் பேட்டி

ஜெய்ஸ்வால் பற்றி நான் நிறைய பேசியிருக்கிறேன். தற்பொழுது எங்கள் டிரெஸ்ஸிங் ரூமை தாண்டி அவரைப்பற்றி நிறைய பேர் பேசுவார்கள் என்று. எனவே அவர் குறித்து நான் மேலும் பேச விரும்பவில்லை. அவர் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை மிகுந்த உயர்தரத்தில் துவங்கியிருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.