2வது முறை.. பாபர் அசாமை வீழ்த்திய கில்.. ஐசிசி ODI ரேங்க் பட்டியலில் 4 இந்திய வீரர்கள்

0
378
Gill

இன்று ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பாக ஐசிசி வெளியிட்டு இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் ரேங்க் பட்டியலில் இந்திய அணி வீரர்களின் ஆதிக்கம் மிகப்பெரிய அளவில் இருக்கிறது.

இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக உள்நாட்டில் விளையாடிய மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இந்திய இளம் தொடக்க ஆட்டக்காரர்கள் இரண்டு அரை சதங்கள் மற்றும் ஒரு சதம் அடித்திருந்தார். இதன் காரணமாக ரேங்க் பட்டியலில் அவர் புதிய உச்சத்தை எட்டி இருக்கிறார்.

- Advertisement -

2வது முறையாக வீழ்த்தப்பட்ட பாபர் அசாம்

தற்போது வெளியிடப்பட்டிருக்கும் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் ரேங்க் பட்டியலில் இந்தியா அணியின் வீரர் கில் 796 புள்ளிகள் எடுத்து முதல் இடத்தைப் பிடித்து அசத்தியிருக்கிறார். முதல் இடத்தில் இருந்த பாபர் அசாம் 773 புள்ளிகள் உடன் இரண்டாம் இடத்திற்கு சரிந்திருக்கிறார்.

இதற்கு முன்பாக 2023 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் போது இதே போல கில் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தார். அப்பொழுது முதல் இடத்தில் இருந்த பாபர் அசாமை அவர் முதல் முறையாக வீழ்த்தி இருந்தார். தற்போது தொடர்ந்து இரண்டாவது முறையாக பாபர் அசாமை கீழே இறக்கி இருக்கிறார்.

- Advertisement -

இந்திய பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம்

தற்போது கில் இந்த பட்டியலில் முதலிடத்தை பிரித்து இருக்கும் நிலையில், இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 761 புள்ளிகள் உடன் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறார். மேலும் இன்னொரு நட்சத்திர வீரர் விராட் கோலி 727 புள்ளிகள் உடன் ஆறாவது இடத்தில் இருக்கிறார். ஸ்ரேயாஸ் ஐயர் 679 புள்ளிகள் உடன் ஒன்பதாவது இடத்தில் தொடர்கிறார்.

இந்தப் பட்டியலில் முதல் 10 இடங்களில் நான்கு இந்திய வீரர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருநாள் கிரிக்கெட்டை பொருத்தவரையில் இந்திய பேட்ஸ்மேன்களின் பேட்டிங் ஃபார்ம் மிகச் சிறப்பாக அமைந்திருக்கிறது. மேலும் கே.எல்.ராகுல் 16வது இடத்தில் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : PAK vs NZ: வெறும் 1 ரன்.. கேன் வில்லியம்சன் 6 வருடமா காத்து வந்த பெருமை.. சாம்பியன்ஸ் டிராபி முதல் போட்டிலேயே முடிந்தத

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன் ரேங்கிங்:

சுப்மன் கில் – 796
பாபர் அசாம் – 773
ரோஹித் சர்மா – 761
ஹென்ரிச் கிளாசென் – 756
டேரில் மிட்செல் – 740
விராட் கோஹ்லி – 727
ஹாரி டெக்டர் – 713
சரித் அசலங்க – 694
ஷ்ரேயாஸ் ஐயர் – 679
ஷாய் ஹோப் – 672

- Advertisement -