இந்தியா-பாக் போட்டி முடிந்ததும்.. அக்தருக்கு சச்சின் தரமான பதிலடி.. என்ன நடந்தது?

0
15258
Sachin

இந்தியா பாகிஸ்தான் அணிகள் சாதாரணமாக மோதிக் கொண்டாலே அந்த போட்டிக்கான எதிர்பார்ப்பும் உற்சாகமும் ரசிகர்களிடமும் முன்னாள் வீரர்களிடமும் மிக அதிகமாக இருக்கும்.

இந்த நிலையில் உலகக் கோப்பைத் தொடர் எனும் பொழுது அது மிகவும் அதிகமாகிறது. அதே சமயத்தில் இந்தியாவில் நடைபெறுகின்ற போட்டி எனும் பொழுது எதிர்பார்ப்புக்கும் உற்சாகத்திற்கும் அளவே இருக்காது.

- Advertisement -

இந்த நிலையில் நடப்பு உலகக் கோப்பை தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று இருந்தது. அதேபோல் பாகிஸ்தான் அணியும் முதல் இரண்டு போட்டிகளை வென்று இருந்தது.

இதில் பாகிஸ்தான அணி தன்னுடைய இரண்டாவது போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை வரலாற்றில் அதிகபட்ச ரன்களை சேஸ் செய்து சாதனை வெற்றியை பெற்று இருந்தது.

அந்த அணிக்கு புதிதாக வந்த துவக்க ஆட்டக்காரர் அப்துல்லா ஷபிக் மிக முக்கியமான அந்த போட்டியில் சதம் அடித்திருந்தார். மேலும் முகமது ரிஸ்வானும் சதம் அடித்திருந்தார்.

- Advertisement -

பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் பேட்ஸ்மேனுமான பாபர் அசாம் ரன் பெரிதாக எடுக்காமலே பாகிஸ்தானை இரண்டு போட்டியிலும் வென்றது அவர்களது நம்பிக்கையை அதிகரித்து இருந்தது.

இது பாகிஸ்தான் முன்னாள் வீரர்களின் நம்பிக்கையையும் அதிகரித்து இருந்தது. இதன் காரணமாக இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கு முன்பாக பாகிஸ்தான் முன்னாள் வீரர்களின் தரப்பில் இருந்து சில கருத்துக்கள் வெளிவந்தன.

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகபந்துவீச்சாளர் சோயப் அக்தர் சச்சின் டெண்டுல்கரை டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் பந்திலேயே வீழ்த்திய போட்டோவை பதிவிட்டு ‘ நாளை இந்த மாதிரி ஒன்றை விரும்புகிறீர்களா?!’ என்று கேட்டிருந்தார்.

சச்சின் டெண்டுல்கர் இந்தியா பாகிஸ்தான் போட்டி முடியும் வரை பொறுமையாக இருந்து, இந்தியா பாகிஸ்தானை அபாரமாக வீழ்த்திய பிறகு ‘ நண்பரே நான் உங்கள் ஆலோசனையை பின்பற்றி, எல்லாவற்றையும் சாதாரணமாக வைத்தேன். கூலாக இருங்கள்’ என்று, அவருடைய பாணியில் பதிலடி தந்திருக்கிறார்!