சச்சின் டெண்டுல்கருக்கு பிறகு தந்தை மகனுடன் விளையாட இருக்கும் விராட் கோலி .. யார் அந்த தந்தை மகன்கள்?

0
1054

இந்திய கிரிக்கெட் அணியின் மாஸ்டர் பிளாஸ்டர் ஆக விளங்கியவர் சச்சின் டெண்டுல்கர். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இவரால் முறியடிக்கப்படாத சாதனைகள் எதுவும் இல்லை என்றே கூறலாம் . 2013 ஆம் ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

சச்சின் டெண்டுல்கரின் ஓய்விற்கு பிறகு கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் விராட் கோலி. டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியை உலகின் தலைசிறந்த அணியாக மாற்றிய விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் சச்சினுக்கு பிறகு இந்தியாவின் ரன் மெஷினாக விளங்கியவர். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 75 சதங்களுக்கு மேல் எடுத்திருக்கும் விராட் கோலி ஒரு நாள் போட்டிகளில் சச்சினின் அதிக சதத்திற்கான சாதனையை முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

- Advertisement -

இந்திய அணியானது தற்போது மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது . வெஸ்ட் இண்டீஸ் தீவுகளில் உள்ள டோமினிக்கா என்ற தீவில் வருகின்ற 12ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டி நடைபெற இருக்கிறது. இதற்காக இரண்டு அணி வீரர்களும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் தோல்விக்கு பிறகு நடைபெற இருக்கின்ற முதல் டெஸ்ட் தொடர் இது என்பதால் இந்திய அணி முழு முனைப்புடன் விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது . மேலும் இளம்பிறரான ஜெய்ஸ்வால் களம் இறக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் இந்த போட்டியில் விளையாட இருக்கும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி சச்சினின் ஒரு தனித்துவமான நிகழ்வை சமன் செய்ய இருக்கிறார் .

சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் தந்தை மற்றும் மகனுடன் சச்சின் டெண்டுல்கர் விளையாடி இருக்கிறார். 1992 ஆம் ஆண்டு இந்திய அணியின் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் போது சச்சின் டெண்டுல்கர் இளம் வீரராக இரண்டு சதங்களை எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது . உலகின் அதிவேக ஆடுகளமான பெர்த் ஆடுகளத்தில் 19 வயது இளைஞனாக சச்சின் டெண்டுல்கர் அடித்த சதம் இன்றளவும் கிரிக்கெட் ரசிகர்களால் பேசப்படுகிறது . உலக கிரிக்கெட்டின் ஜாம்பவான் டான் பிராட்மேன் அந்தத் தொடரின் போது சச்சினை நேரில் அழைத்து பாராட்டினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்தத் தொடரில் ஆஸ்திரேலியா அணியின் ஜெஃப் மார்ஷ் இடம் பெற்று இருந்தார் . இவருடன் 1992 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய சச்சின் இவரது மகனான ஷான் மார்ஸுடன் 2011-12 ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் போது டெஸ்ட் கிரிக்கெட் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி 2011 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தின் போது இந்திய அணியில் இடம் பெற்று இருந்தார் . அப்போது வெஸ்ட் இண்டீஸ் அணியில் சிவனரைன் சந்தர்பால் விளையாடினார் .

தற்போதைய சுற்றுப்பயணத்தின் போது சிவனரைன் சந்தர்பாலின் மகன் தேஜ் நரேன் சந்தர்பால் இடம் பெற்று இருக்கிறார். இந்த டெஸ்ட் போட்டியில் விளையாடுவதன் மூலம் விராட் கோலி தந்தை மற்றும் மகனுடன் விளையாடிய அரிதான நிகழ்வை அடைய இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது