“பாகிஸ்தான அடிச்சதும் புது தைரியம் வந்துருச்சு.. எங்கள ஆதரிக்கும் இந்திய மக்களுக்கு நன்றி!” – இலங்கை வெற்றிக்கு பின் ஆப்கான் கேப்டன் பேட்டி!

0
2897
Afghanistan

இன்று உலகக்கோப்பை தொடரில் புனே மைதானத்தில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் ஏழு விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றி பெற்று இருக்கிறது.

டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி ஒரு கட்டத்தில் சவாலான ரன்களுக்கு செல்லக்கூடிய இடத்தில் இருந்து பின்பு 241 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

- Advertisement -

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி மூன்று விக்கெட்டுகளை மட்டும் இழந்து, 45.2 ஓவரில் ஏழு விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வென்றது.

ஆப்கானிஸ்தான் அணிக்கு ரஹமத் ஷா, கேப்டன் ஷாகிதி மற்றும் ஓமர்ஸாய் மூவரும் அரைசதம் அடித்து பேட்டிங்கில் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்தார்கள். பந்துவீச்சில் ஃபரூக்கி நான்கு விக்கெட் கைப்பற்றினார்.

உலகக்கோப்பைத் தொடரில் ஆறு ஆட்டத்தில் தற்போது விளையாடியிருக்கும் ஆப்கானிஸ்தான் அணிக்கு, இது மூன்றாவது வெற்றியாகும். இதன் மூலம் இன்னும் அரை இறுதி வாய்ப்பில் ஆப்கானிஸ்தான் நீடிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இன்று வெற்றிக்கு பின் பேசிய ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் கூறும் பொழுது “இன்று நாங்கள் செயல்பட்ட விதம் அணிக்குறித்து பெருமையும் மகிழ்ச்சியுமாக இருக்கிறது. பாகிஸ்தானுக்கு எதிராக சேஸ் செய்த பிறகு எங்களுக்கு எந்த இலக்கையும் துரத்த முடியும் என்கின்ற நம்பிக்கை அதிகரித்தது. இன்று எங்களுடைய சேஸ் மிகவும் தொழில்முறையாக இருந்தது.

எங்களுடைய பயிற்சியாளர்கள் எப்பொழுதும் பாசிட்டிவாக இருப்பவர்கள். உலகக் கோப்பைக்கு முன்பாக நாங்கள் கடுமையாக உழைத்தோம். இப்போது அனைத்து பயிற்சியாளர்கள் மற்றும் அணி ஊழியர்கள் என அனைவரும் கடுமையாக உழைத்து எங்களுக்கு நம்பிக்கை கொடுத்து வருகிறார்கள்.

பாகிஸ்தான் போட்டியின் போது எங்கள் பயிற்சியாளரின் வார்த்தை என்னை நிறைய மாற்றியது. ஒரு கேப்டனாக அவர் என்னை முன்னே நிற்க சொன்னார். என்னால் முடிந்தவரை நான் இப்பொழுது அதைச் செய்கிறேன். இந்த போட்டியை முடித்த விதத்தில் மகிழ்ச்சி அடைகிறேன். வரவிருக்கும் ஆட்டங்களில் இதைத் தொடர முயற்சி செய்வேன்.

ரஷித் கான் மிகவும் திறமையான வீரர் மேலும் சுறுசுறுப்பான மனிதர். அவருடைய ஆற்றல் எங்கள் அணியைச் சுற்றி இருக்கிறது. எங்கள் தேசத்திற்கு நான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் மைதானங்களுக்கு வந்து எங்களை ஆதரித்த இந்திய மக்களுக்கு நன்றி!” என்று கூறி இருக்கிறார்!