கோலி சதம்… ஜட்டு, அஸ்வின் பேட்டிங்கில் அசத்தல்… இந்தியா வலுவான முன்னிலை! – அஸ்வினை பாத்து பாத்து ஆடும் வெஸ்ட் இண்டீஸ்.. 2ஆவது டெஸ்டில் என்ன நடக்கிறது?

0
938

விராட் கோலி 76ஆவது சதமடிக்க, அஸ்வின் மற்றும் ஜடேஜா இருவரும் ஆல்ரவுண்டர் ஆட்டத்தை காட்ட முதல் இன்னிங்சில் இந்திய அணி 438 ரன்கள் குவித்தது. இரண்டாம் நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 86 ரன்களுக்கு 1 விக்கெட் எடுத்திருந்தது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. ஜெய்ஸ்வால் 57 ரன்கள், ரோகித் சர்மா என்பது ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தனர். அடுத்து வந்த விராட் கோலி 86 ரன்கள் இருக்கையில் முதல் நாள் ஆட்டம் முடிவடைந்தது. இந்திய அணி நான்கு விக்கெடுகள் இழப்பிற்கு 288 ரன்கள் அடித்திருந்தது.

- Advertisement -

நேற்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கியபோது விராட் கோலி தன்னுடைய 29ஆவது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார். ஒட்டுமொத்தமாக இவர் அடிக்கும் 76 வது சர்வதேச சதம் ஆகும். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்த குயின்ஸ் பார்க் மைதானத்தில் நான்காவது சதத்தை அடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விராட் கோலி 121 ரன்கள் அடித்து எதிர்பாராத வகையில் ரன் அவுட் ஆனார். டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய 19 ஆவது அரை சதத்தை பூர்த்தி செய்த ரவீந்திர ஜடேஜா 61 ரன்களுக்கு அவுட் ஆனார். இளம் வீரர் இசான் கிஷன் 25 ரன்களுக்கு ஆட்டம் இழக்க, களத்தில் நின்று கடைசி வரை விளையாடிய ரவிச்சந்திரன் அஸ்வின் அரைசதம் அடித்தார். இவர் கடைசியில் 56 ரன்கள் அடித்து அவுட் ஆனார்.

முதல் இன்னிங்சில் இந்திய அணி 438 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி தன்னுடடைய முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை துவங்கியது.

- Advertisement -

துவக்க வீரர்கள் பிராத்வெயிட் மற்றும் சந்தர்பால் இருவரும முதல் விக்கெட்டிற்கு 71 ரன்கள் சேர்த்தனர். இதில் சந்தர்பால் 33 ரன்கள் அடித்திருந்தபோது ரவீந்திர ஜடேஜா பந்தில் அவுட் ஆனார். மற்றொரு துவக்க வீரர் பிராத்வெயிட் 37 ரன்களுடனும், அறிமுக வீரர் கிர்க் மெக்கன்சே 14 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாம் நாள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் அடித்திருந்தது. தற்போது வரை 352 ரன்கள் பின்தங்கியுள்ளது.