இந்திய அணி தோல்வி.. உடனே ரஹானே வெளியிட்ட வீடியோ.. பிசிசிஐ மீது கோபத்தில் ரசிகர்கள்.. காரணம் என்ன.?

0
1005

இந்திய அணி தற்போது தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் செஞ்சுசூரியனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இது கிரிக்கெட் ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்களிடையே விமர்சனத்தை எழுப்பத் தொடங்கியுள்ளது.

டெஸ்ட் தொடரை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ட்ரா கூட செய்ய முடியாமல் தோல்வி அடைந்தது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. குறுகிய நாட்களே பயிற்சி மேற்கொண்டது, பயிற்சிப் போட்டியில் இந்திய பந்துவீச்சாளர்களை மட்டுமே பயன்படுத்தியது, வீரர்களின் அணித் தேர்வு ஆகியவை தோல்வியின் முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இதில் சீனியர் வீரரான அஜின்கியா ரகானே டிராப் செய்யப்பட்டு இளம் வீரர்களுக்கு இந்திய அணி வாய்ப்பு அளித்தது. அதன் எதிரொளியாக சுப்மான் கில்,ஜெய்ஸ்வால் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர்களிடம் போராடாமலே சரணடைந்தனர். பொதுவாக வெளிநாட்டு ஆடுகளங்களில் ரகானே எப்போதும் சிறப்பாக செயல்படக் கூடியவர்.

வெளிநாட்டு அணிகளுக்கு எதிராக நல்ல ரெக்கார்டையும் வைத்துள்ளார். சமீபத்தில் அவரது மோசமான ஃபார்ம் காரணமாக அணியிலிருந்து நீக்கப்பட்டார். 2023ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சிறப்பாக விளையாடியதால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ரகானேவிற்கு இடம் கிடைத்தது.

அதில் இந்திய அணி தோல்வியடைந்தாலும் ரகானே குறிப்பிடத்தக்க பங்களிப்பை அணிக்கு வழங்கினார். அவர் முதல் இன்னிங்ஸில் 89 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 46 ரன்களும் குவித்தார். ஆனாலும் அவருக்கு தென்னாப்பிரிக்க தொடரில் இடம் கிடைக்கவில்லை. ஜூனியர் வீரர்களுக்கு வாய்ப்பு அளித்து முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி தோல்வி அடைந்தது.

- Advertisement -

இந்திய அணி தோல்வி அடைந்த பிறகு அஜிங்கியா ரகானே அவரது சோசியல் மீடியா வலைதளத்தில் பேட்டிங் செய்வது போன்ற வீடியோ ஒன்றை பதிவிட்டு அதில் “நோ ரெஸ்ட் டேஸ்” என்று குறிப்பிட்டிருந்தார். இதனைக் கண்ட ரசிகர்கள் தனக்கு வாய்ப்பு அளிக்காததைக் குறிப்பிடும் விதமாக பிசிசிஐயை ரகானே மறைமுகமாக தாக்குகிறார் என்று வலைதளங்களில் பதிவிட்டும், வீடியோவை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து டிரென்ட் செய்தும் வருகின்றனர்.

ரகானே வருகிற ஐபிஎல் தொடருக்கு தயாராகும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டாரா? அல்லது நிஜமாகவே பிசிசிஐ மறைமுகமாக தாக்குகிறாரா? என்று தெரியவில்லை. இவை அனைத்தையும் தாண்டி இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் செய்த தவறுகளை சரி செய்து, இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்று தொடரையாவது சமன் செய்யுமா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. எனவே இந்திய அணி நிர்வாகம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.