100 அடிச்சாலும், 200 அடிச்சாலும் என்னோட அப்ரோச் எப்பவுமே மாறாது – ‘தொடர்நாயகன்’ ஷுப்மன் கில் பேட்டி!

0
162

என்னுடைய அணுகுமறை எப்போதும் ஒரே மாதிரி தான், மாறாது என பேட்டியில் ஷுப்மன் கில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் 70 ரன்கள், 3வது போட்டியில் 116 ரன்கள் என ஒரு அரைசதம் மற்றும் ஒரு சதம் உட்பட 3 போட்டிகளில் 203 ரன்கள் விளாசினார்.

தனது சிறப்பான ஃபார்மை நியூசிலாந்து ஒருநாள் தொடரிலும் ஷுப்மன் கில் தொடர்ந்தார். நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் விளாசி பல சாதனைகள் படைத்தார். 9 சிக்ஸர் 19 பவுண்டரி உட்பட 208(149) அடித்தார்.

இரண்டாவது போட்டியில் இந்திய அணி 109 ரன்களை சேஸ் செய்தது. இப்போட்டியில் நிதானத்துடன் விளையாடி இறுதிவரை அவுட் ஆகாமல் 40 ரன்கள் அடித்து வெற்றியை உறுதி செய்தார்.

3வது ஒருநாள் போட்டியில் அதிரடியான துவக்கம் கொடுத்த ஷுப்மன் கில், ரோகித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்து முதல் விக்கெட்டுக்கு 212 ரன்கள் சேர்த்தார். 78 பந்துகளில் 13 பவுண்டரிகள் 5 சிக்ஸர்கள் என 116 ரன்கள் அடித்து அவுட்டானார்.

நியூசிலாந்து ஒருநாள் தொடரில் 3 போட்டிகளில் 360 ரன்கள் அடித்து, 3 போட்டிகள் கொண்ட இருதரப்பு தொடரில் அதிக ரன்கள் அடித்தவர் என்கிற பாபர் அசாமின் சாதனையையும் சமன் செய்தார்.

இறுதியில் இந்தியா 3-0 என ஒருநாள் தொடரை கைப்பற்றியது. தொடர்நாயகனாக ஒரு இரட்டை சதம், ஒரு சதம் அடித்த ஷுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டார். அப்போது கில் பேசியதாவது:

“தொடரை வென்றது மற்றும் அதில் நான் நன்றாக செயல்பட்டது எனக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது. இரட்டை சதம் அடித்தபின் எனது அணுகுமுறை மாறவில்லை. ஒவ்வொரு போட்டியிலும் நல்ல துவக்கம் கொடுத்து அதை போட்டி முழுவது எடுத்துச்செல்ல வேண்டும். போட்டியின் சூழல் அறிந்து, நல்ல துவக்கத்தை நிறைய ரன்களாக மற்ற வேண்டும் என்கிற அணுகுமுறை எனக்கு உதவுகிறது.” என்றார்.