இந்தியா இப்படி செய்தால், நாங்கள் 2023 உலககோப்பையில் பங்கேற்க மாட்டோம் – பிசிசிஐ-இடம் மல்லுகட்டும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்!

0
116

இப்படியொரு சம்பவம் நடந்தால் 2023 உலககோப்பை தொடரில் நாங்கள் மாட்டோம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

டி20 உலக கோப்பை தொடரில் வருகிற 23ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கான எதிர்பார்ப்பு தற்போது கிரிக்கெட் உலகில் நிலவி வருகிறது. அனைத்து ரசிகர்களின் கவனம் அதை நோக்கி இருந்த போது, பிசிசிஐ செயலாளர் ஜே ஷா வெளியிட்ட கருத்தால் சர்ச்சை நிலவியுள்ளது.

2023 ஆம் ஆண்டு ஆசிய கோப்பையை நடத்துவதற்கான உரிமை பாகிஸ்தான் வசம் இருக்கிறது. இதில் இந்திய அணி பாகிஸ்தான் சென்று பங்கேற்குமா? இல்லையா? என்ற குழப்பம் தொடர்ந்து நிலவி வந்தது.

ஏனெனில் இந்தியா பாகிஸ்தான் இடையேயான அரசியல் விவகாரங்களுக்காக இரு நாடுகளுக்கும் இடையே இருதரப்பு கிரிக்கெட் தொடர்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தடைப்பட்டது.ஐசிசி மற்றும் ஆசிய கிரிக்கெட் அசோசியேசன் நடத்தும் போட்டிகளில் மட்டும் இவ்விரு அணிகளும் மோதிக் கொள்கின்றன. அதுவும் பொது மைதானங்களில் நடத்தப்பட்டால் மட்டுமே.

இந்நிலையில் அடுத்த ஆண்டுக்கான ஆசியக் கோப்பையில் இந்திய அணி பங்கேற்பது குறித்து கருத்துக்களை வெளியிட்ட ஜே ஷா கூறியதாவது:

“2023 ஆம் ஆண்டு ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி பாகிஸ்தான் சென்று பங்கேற்காது. பொது மைதானத்தில் நடத்துவதற்கான திட்டம் எதுவும் தற்போது வரை தெரியவில்லை. போட்டி பொது மைதானத்தில் நடத்தப்பட்டால் இந்திய அணி பங்கேற்பதை பற்றி யோசிப்போம்.” என்றார்.

இதற்கு பாகிஸ்தான் ரசிகர்கள் மட்டுமல்லாது முன்னாள் வீரர்கள் பலரும் தொடர்ந்து கருத்துக்களை முன்வைத்து வந்தனர். அதைப் பற்றிய பதட்டமும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் நிலவியது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் சிலர் ஜே ஷா சொன்னதற்கு கருத்து தெரிவித்திருக்கிறார்

“அடுத்து நவம்பர் மாதம் ஐசிசி பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம் மெல்போன் நகரில் நடைபெற உள்ளது. அப்போது இதைப்பற்றி நாங்கள் பேசிக் கொள்கிறோம். தற்போது இதைப் பற்றி பேசுவதற்கு ஒன்றும் இல்லை.” என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள ஆசிய கோப்பை தொடரை பற்றி தற்போது பிசிசிஐ செயலாளர் ஜே ஷா பேசுவதற்கான அவசியம் என்ன? முற்றிலும் ஆச்சரியமாக இருக்கிறது. இதில் வேறு ஏதாவது அரசியல் காரணமும் இருக்கலாம் என பாகிஸ்தான் வாரியத்தின் அதிகாரிகள் பேசிக் கொள்வதாக தகவல்கள் வருகின்றன.

2023 ஆம் ஆண்டு ஆசிய கோப்பை நடத்துவதற்கான உரிமத்தை எக்காரணத்தை கொண்டும் வேறு இடத்தில் நடத்துவதற்கு விட்டுக் கொடுக்கப்போவதில்லை என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. மேலும் எதன் அடிப்படையில், இப்படி போது இடத்தில் நடத்துவதற்கு ஆசிய கிரிக்கெட் அசோசியேசன் தலைவர் ஒப்புக்கொண்டார் என ஜே ஷா தெரிவித்தார்.

போது இடத்தில் நடத்த ஒப்புக் கொள்வதற்கு அவர் யார்? குழு உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து முடிவெடுப்பது தான் விதிமுறை. அதற்கு தலைமை தாங்குவது மட்டுமே அங்குள்ள தலைவரின் வேலை என கேள்வி எழுப்பியதாகவும் தெரிகிறது.

மேலும் விவகாரம் பற்றி பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ரமிஷ் ராஜா கூறுகையில், “கடைசியாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் இருக்கும் ஒரே வாய்ப்பு ஆசிய கிரிக்கெட் அசோசியேசன் குழு உறுப்பினர்களில் இருந்து விலகிக் கொள்வதுதான். இந்த அசோசியேஷன் பல்வேறு ஆசிய நாடுகளில் கிரிக்கெட் போட்டிகளை வளர்ப்பதற்காக உருவாக்கப்பட்டது. தற்போது செயல்படும் விதம் கிரிக்கெட் போட்டிகளை வளர்ப்பதற்காக இல்லை என்பதால், அதில் உறுப்பினராக பாகிஸ்தான் இருப்பதில் என்ன பயன்?.

இந்தியா இத்தகைய முடிவை எடுக்கும் என்றால், அடுத்த வருடம் ஒருநாள் போட்டிக்கான உலக கோப்பையில் இருந்து பாகிஸ்தான் அணி விலக நேரிடும். எதற்காக நாங்கள் மட்டும் இந்தியா பயணித்து கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க வேண்டும்.” என ரமிஷ் ராஜா பேசியுள்ளார்.