40 நாட்களுக்குப் பின் ரிஷப் பண்ட் போட்டு ட்விட்; சூர்யா – வார்னர் நெகிழ்ச்சி கமெண்ட்!

0
443
Rishab pant

இந்திய அணிக்கு கேப்டன், பேட்ஸ்மேன், விக்கெட் கீப்பர் என தூணாக நின்றவர் மகேந்திர சிங் தோனி. அவரது இடத்தில் அவரது பொறுப்பை எடுத்துக் கொண்டு ஒரு வீரர் செயல்படுவது என்பது எளிதான காரியம் கிடையாது!

இப்படியான நிலையில் அவருக்கு மாற்றாக இந்திய அணி நிர்வாகம் டெல்லியில் இருந்து ஒரு இளம் வீரரை கொண்டு வந்து, அவர் ஆரம்ப காலங்களில் சரியாக செயல்பட முடியாமல் சந்தித்த விமர்சனங்கள் மிக மிக அதிகம்.

- Advertisement -

ஆனால் அந்த வீரரான ரிஷப் பண்ட்தான் கடந்த வருடத்தில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் மிக வெற்றிகரமான வீரராக விளங்கினார். தற்பொழுது இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் நடந்து கொண்டிருக்கும் பார்டர் கவாஸ்கர் டிராபியில் ரிஷப் பண்ட் இல்லாத நிலையில் அவரது இடத்தை நிரப்ப கே எஸ் பரத் சூரியகுமார் என இரண்டு வீரர்களை கொண்டு வர வேண்டி இருக்கிறது.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் 30ஆம் தேதி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் விதமாக எதிர்பாராத ஆபத்தான சாலை விபத்தில் ரிஷப் பண்ட் சிக்கினார். அதன்பின் தீவிர சிகிச்சையில் இருந்து வெகு வேகமாக குணமடைந்து வருகிறார்.

இந்த நிலையில் 40 நாட்களுக்குப் பிறகு முதல்முறையாக அவரது புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு, முன்னோக்கி ஒரு அடி, வலிமையாக ஒரு அடி, சிறந்த ஒரு அடி என்று பதிவிட்டு இருந்தார்.

- Advertisement -

அவரது இந்த சமூக வலைத்தள பதிவுக்கு இந்திய அணியின் வீரர் சூரியகுமார் யாதவ் வணங்கும் ஒரு பொம்மையையும் இதய பொம்மையையும் குறியிட்டு இருக்கிறார். ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் தலைமை தாங்கும் டெல்லி அணியில் விளையாடும் ஆஸ்திரேலியா வீரர் டேவிட் வார்னர் ” உங்களைப் பற்றிதான் நினைத்துக் கொண்டிருந்தேன்” என்று கமெண்ட் செய்திருக்கிறார்.

வேகமாக தேறிவரும் ரிஷப் பண்ட் இந்த ஐபிஎல் தொடரில் விளையாட முடியாது என்றாலும் அதற்கு அடுத்து வரக்கூடிய 50 ஓவர் உலகக் கோப்பைக்கு குணமடைந்து முழு உடல் தகுதியை எட்ட வேண்டும் என்பதே அனைவரது விருப்பமும் பிரார்த்தனையுமாக இருக்கிறது!