20 வருடங்கள் பின் முத்தரப்பு தொடர் நடத்தும் பாகிஸ்தான்.. 2 பெரிய கிரிக்கெட் நாடுகள் சம்மதம்

0
260
Pakistan

கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடர் நடத்தப்படுவதற்கு என்னென்ன சிக்கல்களை சந்தித்ததோ, அதேபோல் 2025 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடக்க இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் நடக்கும் சாம்பியன் டிராபியும் சந்திக்க இருக்கிறது.

இந்திய அணி நிச்சயம் சாம்பியன் டிராபி தொடரில் பங்கேற்பதற்கு பாகிஸ்தான் செல்லாது என்று தெரிகிறது. அப்படி செல்லாவிட்டால் இந்திய அணிதொடரை விட்டு வெளியேறுமா? இல்லை இந்திய அணிக்காக ஆசியக் கோப்பை தொடரை நடத்தியது போல, பாகிஸ்தானுக்கு வெளியிலும் சில போட்டிகள் நடத்தப்படுமா? என்பது குறித்து இன்னும் முடிவாகவில்லை.

- Advertisement -

மற்றபடி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவதற்கு, நடந்து முடிந்த ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் புள்ளி பட்டியலில் முதல் எட்டு இடங்களில் உள்ள மற்ற அணிகள் எல்லாமே தயாராகவே இருக்கின்றன என்று தெரிகிறது. எனவே எப்படியும் அடுத்த வருடம் பாகிஸ்தானில் இந்த தொடர் நடைபெறும்.

மேலும் கடைசியாக 2017 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில், இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டம் பெற்றது. எனவே நடப்பு சாம்பியன்ஸ் டிராபி சாம்பியன் ஆக பாகிஸ்தான் அணியே இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 20 வருடங்களுக்குப் பிறகாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒருநாள் கிரிக்கெட்டில் மிக முக்கியமான நகர்வு ஒன்றை மேற்கொண்டு இருக்கிறது. அடுத்த ஆண்டு தங்கள் நாட்டில் சாம்பியன்ஸ் டிராபி நடைபெறுவதற்கு முன்பாக, 2025 பிப்ரவரி மாதத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளை வைத்து, ஒரு நாள் கிரிக்கெட் வடிவத்தில் முத்தரப்பு தொடரை நடத்த திட்டமிட்டு இருக்கிறது. இதற்கு தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியங்கள் ஒப்புதல் கொடுத்து இருக்கின்றன.

- Advertisement -

கடைசியாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் 2004 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளை வைத்து முத்தரப்புத் தொடர் நடத்தியதுஅதில் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியை 119 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வென்று சாம்பியன் ஆகியிருந்தது. இந்த நிலையில் உலக கிரிக்கெட்டில் மீண்டும் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் முத்தரப்பு தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கொண்டு வருகிறது. மேலும் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தை காப்பாற்ற வேண்டும் என்றால் முத்தரப்பு கிரிக்கெட் தொடர்கள் நடத்தப்பட வேண்டியது அவசியம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : “மும்பை டீம்ல எனக்காக இவங்க ரெண்டு பேர் இருக்காங்க.. மறக்க முடியாத மாதிரி பண்ணுவேன்” – ஹர்திக் பாண்டியா பேட்டி

இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தரப்பில் கூறும் பொழுது “பாகிஸ்தான் தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து என மூன்று நாடுகளுக்கு இடையே நடைபெற இருக்கும் முத்தரப்பு கிரிக்கெட் தொடர் பரபரப்பான ஒன்றாக இருக்கும். நீண்ட நாட்களுக்குப் பிறகு இப்படியான ஒரு தொடரை பாகிஸ்தான் நடத்துகிறது. இந்தத் தொடரில் விளையாடச் சம்மதித்த நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் போர்டு தலைவர்களுக்கு நன்றி சொல்லிக்கொள்கிறோம். மேற்கொண்டு 2025 ஆம் ஆண்டு சாம்பியன் டிராபி தொடரை நடத்துவதையும் ஆர்வமாக எதிர்நோக்குகிறோம்” என்று கூறப்பட்டிருக்கிறது.