12 வருடம் கழித்து வந்து விக்கெட் கணக்கை துவங்கிய உனட்கட் – வீடியோ இணைப்பு!

0
504
Unadkat

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளை இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் தொடங்கியது . இதில் டாசில் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது . அந்த அணியில் யாசிர் அலிக்கு பதிலாக முஃமினுல் ஹக்கும் இபாதத் உசேனுக்கு பதிலாக டஸ்கின் அகமதுவும் சேர்க்கப்பட்டனர் .

இந்தப் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் இந்திய அணியில் சென்ற போட்டியின் ஆட்ட நாயகன் குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஜெய்தேவ் உனத்கட் அணியில் சேர்க்கப்பட்டார் . இது உனத்கட் 12 வருடங்களுக்குப் பிறகு ஆடப்போகும் டெஸ்ட் போட்டியாகும் .

- Advertisement -

முதலில் பேட்டிங்கை துவக்கிய பங்களாதேஷ் அணி நிதானமாக விக்கெட் இழப்பின்றி துவங்கியது . அந்த அணியின் துவக்க வீரர்கள் நிதானமாக ஆடி ரண்களை சேர்த்தனர். அணியின் ஸ்கோர் 39 ஆக இருந்தபோது உனத்கட் இந்திய அணி எதிர்பார்த்துக் கொண்டிருந்த முதல் விக்கெட்டை வீழ்த்தி கொடுத்தார் . கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு பிறகு தனது முதல் டெஸ்ட் விக்கெட் கைப்பற்றி கணக்கை துவங்கினார் உனத்கட்.

இதற்கு முன் 2010 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தின் போது செஞ்சூரியனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 26 ஓவர்களை வீசிய உனத்கட் விக்கெட்டுகள் எதையும் கைப்பற்றவில்லை . பன்னிரண்டு வருடங்களுக்கு பிறகு இந்திய அணிக்காக மீண்டும் ஆடிய அவர் சென்ற போட்டியில் சதம் அடித்த ஜாகிர் ஹசனின் விக்கெட்டை வீழ்த்தினார்.

தனது முதல் டெஸ்ட் கிரிக்கெட் ஆக 12 வருடங்கள் காத்திருந்து முதல் விக்கெட் வீழ்த்தி இருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது . இந்த விக்கெட் வீடியோ இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது.

- Advertisement -