AFGvsIRE ஒன்லி டெஸ்ட்.. பவுலிங்கில் கெத்து காட்டிய அயர்லாந்து.. சுருண்ட ஆப்கானிஸ்தான்

0
199
Afghanistan

டெஸ்ட் கிரிக்கெட் அந்தஸ்தை பெற்றுள்ள சிறிய நாடுகளுக்கும், டெஸ்ட் போட்டி அட்டவணைகளை கொடுத்த ஐசிசி முடிவு செய்திருக்கிறது. இதன்படி குறைந்தபட்சம் ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் ஆவது சிறிய அணிகள் விளையாடுவதை ஐசிசி உறுதி செய்கிறது.

இந்த வகையில் சமீபத்தில் இலங்கை வந்த ஆப்கானிஸ்தான அணி ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் அந்த அணிக்கு எதிராக விளையாடி தோற்றது. இதற்குப் பிறகு வெள்ளைப்பந்து தொடரிலும் பங்கேற்று விளையாடுகிறது.

- Advertisement -

இந்த நிலையில் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற இரண்டு சிறிய நாடுகளான ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து இரண்டு நாடுகளும் அபுதாபியில் வைத்து ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் இன்று முதல் விளையாடுகின்றன.

இந்தப் போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான அணி முதலில் பேட்டிங் செய்வது என முடிவு செய்தது. அந்த அணிக்கு இப்ராஹிம் ஜட்ரன் 53, கடைசி கட்டத்தில் கரீம் ஜனத் 41 ரன்கள் எடுக்க, ஆப்கானிஸ்தான் அணி 155 ரன்கள் எடுத்து சுருண்டது.

அயர்லாந்து தரப்பில் மார்க் அடைர் மிகச் சிறப்பாக பந்துவீசி 16.5 ஓவரில் 5 மெய்டன்கள் 39 ரன்கள் விட்டுத் தந்து 5 விக்கெட் கைப்பற்றினார். மேலும் கிரேக் யங் மற்றும் கர்டிஸ் ஹேம்பர் இருவரும் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள்.

- Advertisement -

இதற்கு அடுத்து தனது முதல் இன்னிங்ஸ் விளையாடிய அயர்லாந்து அணி முதல் நாள் ஆட்டநேரம் முடிவில் நான்கு விக்கெட் இழந்து 100 ரன்கள் எடுத்திருக்கிறது.

இதையும் படிங்க : ஸ்ரேயாஸ் இஷானை சம்பள பட்டியலில் இருந்து நீக்கியது பிசிசிஐ.. 30 வீரர்களுக்கு இடம்.. முழு தகவல்கள்

அயர்லாந்து அணிக்கு கர்டிஸ் ஹேம்பர் 49, ஹாரி டெக்டர் 32* ரன்கள் எடுத்திருக்கிறார்கள். ஆப்கானிஸ்தான் தரப்பில் நவீத் ஜட்ரன் மற்றும் ஜியா உர் ரஹ்மான் இருவரும் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றி இருக்கிறார்கள்.