“ஆப்கானிஸ்தானின் இந்த அபார வெற்றிகளுக்கு.. இந்திய வீரர் ஒருவர்தான் காரணம்!” – சச்சின் டெண்டுல்கர் சுவாரசியமான ட்விட்!

0
15252
Sachin

இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பாகிஸ்தான் அணிக்கு எதிராக பெற்று இருக்கிறது.

இன்று டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 282 ரன்கள் எடுத்தது. ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு மிக சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அப்படி எதுவும் இல்லை.

- Advertisement -

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஆப்கானிஸ்தான் அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் இருவரும் அரை சதம் அடித்தார்கள். இதற்கடுத்து பேட்டிங் செய்ய வந்த ரஹமத் ஷா மற்றும் நான்காவதாக வந்த கேப்டன் ஷாகிதி இருவரும் ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்று ஆப்கானிஸ்தான் வெற்றியை உறுதிப்படுத்தினார்கள்.

ஏற்கனவே இந்த ஒருநாள் கிரிக்கெட் உலக சாம்பியன் இங்கிலாந்தை ஆப்கானிஸ்தான் வீழ்த்தி இருந்தது. இந்த நிலையில் பாகிஸ்தான் அணியை வெகு நாளாக வீழ்த்த முயற்சி செய்து வந்த ஆப்கானிஸ்தான் இன்று உலக கோப்பையில் வைத்து முதல் முறையாக வீழ்த்தி இருக்கிறது. சந்தேகத்துக்கு இடமில்லாமல் இந்த வெற்றி மற்றும் இந்த உலகக் கோப்பை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் மிகுந்த முக்கியத்துவத்தை பெறுகிறது.

இங்கிலாந்தைச் சேர்ந்த முன்னாள் வீரர் ஜோனதன் டிராட் ஆப்கானிஸ்தான் அணிக்கு பயிற்சியாளராக இருக்க, இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா ஆலோசகராக உலகக் கோப்பை தொடருக்கு தற்பொழுது பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த நிலையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆப்கானிஸ்தான அணியின் வெற்றி குறித்து டிவிட் செய்துள்ள சச்சின் டெண்டுல்கர் “இந்த உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணியின் ஆட்டம் மிகச் சிறப்பாக இருக்கிறது. அவர்கள் பேட்டிங்கில் காட்டிய ஒழுக்கம், அவர்களுடைய சுபாபம் மற்றும் விக்கெட்டுகளுக்கு இடையே கடினமாக ஓடுவது அவர்களுடைய கடின உழைப்பை காட்டுகிறது.

இது ஆப்கானிஸ்தான் அணிக்குள் சென்றிருக்கும் திரு அஜய் ஜடேஜாவால் நடந்திருக்கலாம். ( நகைச்சுவையாக) வலிமையான பந்துவீச்சு வரிசையுடன் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இருப்பது புதிய ஆப்கானிஸ்தான் அணியைக் காட்டுகிறது. கிரிக்கெட் உலகம் இதை கவனத்தில் கொள்கிறது. வெல்டன்!” என்று கூறி இருக்கிறார்!