தங்களது சொந்த மண்ணில் ஜிம்பாப்வே அணி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெறும் 54 ரன்களுக்கு சுருண்டு 232 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட தோல்வி அடைந்திருக்கிறது.
தற்போது ஆப்கானிஸ்தான் அணி மூன்று வடிவ கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடுவதற்கு ஜிம்பாப்வே நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரையும், தற்போது ஒருநாள் கிரிக்கெட் தொடரையும் ஆப்கான் அணி கைப்பற்றி இருக்கிறது.
இளம் வீரரின் அபார சதம்
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. ஜிம்பாப்வே அணி முதல் விக்கெட்டுக்கு அபாரமாக விளையாடி 210 பந்துகளில் 191 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அப்துல் மாலிக் 101 பந்தில் 84 ரன்கள் எடுத்தார். இன்னொரு தொடக்க ஆட்டக்காரர் செடியுல்லாஹ் அடால் அபாரமாக விளையாடி 128 பந்தில் 8 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் உடன் 104 ரன்கள் குவித்தார்.
இதைத்தொடர்ந்து கேப்டன் ஷாகிதி 30 பந்தில் 29 ரன்கள் எடுத்தார். ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 286 ரன்கள் சேர்த்தது. ஜிம்பாப்வே அணியின் தரப்பில் நியாம்ஹூரி மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
பரிதாபமாக சுருண்ட ஜிம்பாப்வே
இதைத்தொடர்ந்து விளையாட வந்த ஜிம்பாப்வே அணி ரன் கணக்கை துவங்குவதற்கு முன்பாகவே விக்கட்டை இழந்தது. தொடர்ந்து விளையாடிய அந்த அணி 17.5 ஓவரில் 54 ரன்கள் எடுத்து சுருண்டது அந்த அணியில் 9 வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினார்கள். ஆப்கானிஸ்தான் அணி 232 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
இதையும் படிங்க : 2025 பாகிஸ்தான் சாம்பியன்ஸ் டிராபி.. ஐசிசி எடுத்த அதிரடியான முக்கிய முடிவு.. இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சி.. வெளியான தகவல்
ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சில் அபாரமாக செயல்பட்ட அல்லா கசன்பர் மற்றும் நவீத் ஜட்ரன் இருவரும் தலா 3 விக்கெட் கைப்பற்றினார்கள். பசருல்லா பரூக்கி 2, அசமத்துல்லா ஓமர்சாய் 1 விக்கெட் கைப்பற்றினார்கள்.






