2025 பாகிஸ்தான் சாம்பியன்ஸ் டிராபி.. ஐசிசி எடுத்த அதிரடியான முக்கிய முடிவு.. இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சி.. வெளியான தகவல்

0
343

அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் வடிவத்திற்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்துகிறது. இதில் இந்திய அணி பங்கேற்கும் விதமாக ஐசிசி புதிய திட்டமிடலை உருவாக்கி இருக்கிறது. இது தொடர்பான செய்திகள் தற்பொழுது வெளியாகியிருக்கிறது.

கடந்த ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இரு நாடுகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர்களை விளையாடாமல் தவிர்த்து வருகின்றன. இதற்குப் பின்னணியில் அரசியல் காரணங்கள் இருக்கிறது என்பது தெரிந்த செய்தி.

- Advertisement -

சாம்பியன் டிராபி சுற்றி நடந்த விஷயங்கள்

கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு பாகிஸ்தான் எந்தவித நிபந்தனையும் விதிக்காமல் வந்து விளையாடி சென்றது. எனவே அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு இந்திய அணியும் பாகிஸ்தானுக்கு வரவேண்டும் என அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் விரும்பியது.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் இந்திய அரசு இந்திய அணியை பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் செல்ல அனுமதிக்கவில்லை. எனவே சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அட்டவணையை தீர்மானிப்பதில் இழுபறி ஏற்பட்டது. மேலும் இந்திய அணியை இணைத்து சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்த ஐசிசி பல்வேறு முயற்சிகளை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் பேச்சுவார்த்தையின் மூலம் செய்து வந்தது.

- Advertisement -

வெளியான புதிய தகவல்கள்

இந்த நிலையில் இந்திய அணி விளையாடும் போட்டிகள் அனைத்தும் துபாயில் நடைபெறும் என நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் வருகிறது. மேலும் இந்திய அணி அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றால் அந்த போட்டிகளும் துபாயிலேயே நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஒரு வேலைக்கு இந்திய அணி தகுதி பெறாவிட்டால் இந்த போட்டிகள் அனைத்தும் பாகிஸ்தானில் லாகூர் மற்றும் கராச்சி மைதானத்தில் நடத்தப்படுகிறது.

இதையும் படிங்க : இந்திய அணியில் என் மகனுக்கு அந்த அவமானம் நடந்தது.. ஓய்வுக்கு அதுதான் காரணம் – அஸ்வின் தந்தை பேட்டி

மேலும் பாகிஸ்தானில் அடுத்த நடைபெற இருக்கும் மகளிர் டி20 உலக கோப்பை தொடரும் இதே போன்ற முறையில் நடைபெறும் என்றும், 2026 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடரிலும் பாகிஸ்தான் அணி இந்தியா போலவே பொதுவான இடத்தில் விளையாடும் என்றும் செய்திகள் கூறுகிறது. தற்பொழுது இரு நாடுகளுக்கும் ஐசிசி தொடர்களில் பங்கேற்பது குறித்து ஒரு பொதுவான ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்பது தற்பொழுது 99 சதவீதம் உறுதியாக இருப்பதால் இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

- Advertisement -