தற்போது சார்ஜாவில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 92 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இருக்கிறது.
பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே சார்ஜாவில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் என்ன நடைபெறுகிறது. இந்த தொடரில் இன்று முதல் போட்டி நடைபெற்றது.
சரிவிலிருந்து மீண்ட ஆப்கானிஸ்தான் அணி
இந்தப் போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான அணி முதலில் பேட்டிங் செய்வது என முடிவு செய்தது. முதலில் பேட்டிங் செய்ய வந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் குர்பாஸ் 5, செடியுல்லா அடால் 21 ரன்கள் எடுத்து வெளியேறினார்கள். இதைத் தொடர்ந்து வந்த ரஹ்மத் ஷா 2, அசமத்துல்லா 0, குல்பதின் 22 ரன்கள் எடுத்து வெளியேறினார்கள்.
ஆப்கானிஸ்தான் அணி முக்கிய ஐந்து விக்கெட்டுகளை 71 ரன்களுக்கு இழந்தது. இதற்கு அடுத்து கேப்டன் ஷாகிதி 52, முகமது நபி 89 ரன்கள் எடுத்தார்கள். இந்த ஜோடி 14 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. இறுதியாக ஆப்கானிஸ்தான அணி 49.4 ஓவரில் 235 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. பங்களாதேஷ் தரப்பில் டஸ்கின் அஹமத் மற்றும் முஸ்தாஃபிசுர் ரஹ்மான் தலா நான்கு விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள்.
23 ரன்னுக்கு 8 விக்கெட்டுகள்
இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய பங்களாதேஷ் அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் எடுத்து வலிமையான நிலையில் இருந்தது. இதற்கு அடுத்து மேற்கொண்டு 23 ரன்கள் மட்டுமே எடுத்து 8 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்களுக்கு சுருண்டது.
இதையும் படிங்க : சிஎஸ்கே இதை செஞ்சிருக்க கூடாது.. பிளேயர்ஸ விட முதல்ல நாட்டுக்கு முக்கியத்துவம் கொடுங்க – ராபின் உத்தப்பா பேட்டி
ஆப்கானிஸ்தான் அணியின் தரப்பில் கேப்டன் நஜ்முல் 47 ரன்கள் எடுத்தார். ஆப்கானிஸ்தான் அணியில் புதிய சுழல் பந்துவீச்சு நட்சத்திரமாக உருவாகி வரும் அல்லாஹ் கஸன்பர் 6.3 ஓவரில் 26 ரன்கள் மட்டும் தந்து 6 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இவரது சூழலில் சிக்கி பங்களாதேஷ் அணி 92 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது!






