சிஎஸ்கே இதை செஞ்சிருக்க கூடாது.. பிளேயர்ஸ விட முதல்ல நாட்டுக்கு முக்கியத்துவம் கொடுங்க – ராபின் உத்தப்பா பேட்டி

0
726

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்து தற்போது மோசமான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.

இந்த சூழ்நிலையில் முன்னாள் இந்திய அணி வீரரும், சிஎஸ்கே அணி வீரருமான ராபின் உத்தப்பா சிஎஸ்கே நிர்வாகம் குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணியின் மோசமான தோல்வி

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. அதில் பேட்டிங், பந்து வீச்சு மற்றும் பீல்டிங் என அனைத்து துறைகளிலும் கலக்கிய நியூஸிலாந்து அணி டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் மிகச் சிறப்பான வெற்றியை பெற்றிருக்கிறது. இதில் குறிப்பிடத்தக்க வீரராக இருக்கும் இந்திய வம்சாவளி வீரரான ரச்சின் ரவிந்த்ரா இந்த டெஸ்ட் தொடரில் 256 ரன்கள் குவித்திருக்கிறார். இவரது பேட்டிங் சராசரி 51.20 ஆக இருந்திருக்கிறது.

இந்தத் தொடரில் ஒரு சதமும் அடித்து நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்திருக்கிறார். இந்த சூழ்நிலையில் டெஸ்ட் தொடருக்கு முன்னதாக ரச்சின் ரவிந்த்ரா சிஎஸ்கே அகாடமியில் பயிற்சி மேற்கொண்ட நிலையில் அது டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடுவதற்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா ஐபிஎல் நிர்வாகம் தங்கள் வீரர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விட நாட்டிற்கு முக்கியத்துவம் கொடுத்து இது போன்ற விஷயங்களை தவிர்க்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

ஐபிஎல் நிர்வாகம் இதை செய்யக்கூடாது

இதுகுறித்து அவர் கூறும் போது “ரச்சின் ரவீந்த்ரா சிஎஸ்கே அகாடமியில் டெஸ்ட் தொடருக்கு முன்னதாக பயிற்சி மேற்கொண்டார். சிஎஸ்கே ஒரு அழகான பிரான்சிஸ் அணி. அது எப்போதும் தனது வீரர்களை நன்றாக கவனித்துக் கொள்ளும். ஆனால் அதைவிட இங்கு நாட்டின் நலன் என்பது மிக முக்கியமான ஒன்று. குறிப்பாக ஒரு வெளிநாட்டு வீரர் நமது நாட்டிற்கு எதிராக விளையாடும் போது ஒரு வரைமுறையை வகுக்க வேண்டியது அவசியம்.

இதையும் படிங்க:நானே சொல்றேன்.. பும்ரா ஸ்டார்க் விட.. இவர்தான் அதிக விக்கெட் எடுப்பார்.. காரணம் இதுதான் – ரிக்கி பாண்டிங் கணிப்பு

சிஎஸ்கே என்பதில் எனக்கு ஆச்சரியம் இல்லை. நான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை முற்றிலும் நேசிக்கிறேன். தங்கள் வீரர்களுக்கு ஒரு ஐபிஎல் நிர்வாகம் முக்கியத்துவம் கொடுக்கலாம். ஆனால் அதுவே நமது நாட்டுக்காக என்று வரும்போது ஒரு வரைமுறையை தாண்டாமல் செயல்பட வேண்டியது அவசியம்” என்று ராபின் உத்தப்பா கூறியிருக்கிறார். அதாவது வெளிநாட்டு வீரர்கள் இந்திய அணிக்கு எதிராக விளையாட வரும்போது அந்தந்த ஐபிஎல் உரிமையாளர்கள் அகாடமியில் விளையாட வழிவகை செய்து கொடுக்காமல் இருப்பது நல்லது என்று உத்தப்பா கூறி இருக்கிறார்.

- Advertisement -