ஆப்கானிஸ்தான் ஓபனிங் ஜோடி 256 ரன்கள் பார்ட்னர்ஷிப்.. இருவரும் சதம்! 189க்கு சுருண்ட பங்களாதேஷ் படுதோல்வி.. தொடரையும் இழந்தது!

0
828

துவக்க ஜோடி இருவரும் சதம் அடித்து மிரட்ட, 331 ரன்கள் குவித்தது ஆப்கானிஸ்தான் அணி. 189 ரன்களுக்கு ஆல் அவுட்ட்டாகி, 142 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது பங்களாதேஷ் அணி. தொடரையும் இழந்தது.

பங்களாதேஷ் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வரும் ஆப்கானிஸ்தான் அணி முதல் ஒருநாள் போட்டியில் டாகவோர்த் லூயிஸ் முறைப்படி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில் ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரர்கள் குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் ஜாத்ரான் இருவரும் முதல் விக்கெட்டிற்கு 256 ரன்கள் குவித்து வரலாறு படைத்தனர். ஒருநாள் போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணிக்கு கிடைத்த அதிகபட்ச பார்ட்னர்ஷிப் இதுவாகும்.

அதிரடியாக விளையாடிய குர்பாஸ் 8 சிக்ஸர்கள் 13 பவுண்டரிகள் உட்பட 125 பந்துகளில் 145 ரன்கள் அடித்தார். ஒருநாள் கிரிக்கெட்டில் இவர் அடிக்கும் நான்காவது சதம் இதுவாகும். மற்றொரு துவக்க வீரர் இப்ராஹிம் ஒரு சிக்ஸ் மற்றும் ஒன்பது பவுண்டர்கள் உட்பட 100 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார்.

மற்ற வீரர்கள் எவரும் பாட்னர்ஷிப் அமைக்கவில்லை. விரைவாக விக்கெட்டுகளை இழந்ததால் ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 331 ரன்கள் அடித்தது. வங்கதேச பந்துவீச்சாளர்கள் நான்கு பேர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தனர்.

- Advertisement -

ஏற்கனவே முதல் போட்டியை இழந்திருந்த வங்கதேசம் அணி இந்த போட்டியில் தோல்வியை சந்திக்கும் பட்சத்தில் தொடரை இழக்க நேரிடும் என்கிற அழுத்தத்துடன் களமிறங்கியது.

துவக்க வீரர் நயிம் 9 ரன்கள், கேப்டன் லிட்டன் தாஸ் 13 ஆண்டுகளுக்கு அவுட் ஆகினர். அடுத்து வந்த சான்டோ வெறும் 1 ரன் அடித்து ஆட்டம் இழந்தார். இதனால் 25 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து ஆட்டம் கண்டது வங்கதேசம் அணி.

அடுத்து வந்து ஆபீப் ஹுசைன்(0), தவுஹித்(16) இருவரும் விரைவாக விக்கெட்டை பறிகொடுத்தனர். சிறிது நேரம் தாக்குப்பிடித்த மூத்தவீரர் சகிப் அல் ஹாசன் 25 ரன்களுக்கு அவுட் ஆனார்.

மெஹிடி ஹாசன் மற்றும் முஷ்ஃபிகுர் இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து ரன் சேர்த்தனர். ஆனால் இதுவும் நீடிக்கவில்லை. மெஹ்டி ஹாசன் 25 ரன்களுக்கு அவுட் ஆனார். அரைசதம் கடந்த முஷ்ஃபிகுர் 69 ரன்களுக்கு அவுட் ஆனபின், வங்கதேசம் அணி 189 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

ஆப்கானிஸ்தான் அணி 142 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிவிட்டது.