ஆப்கான் தென் ஆப்பிரிக்கா ODI.. இந்தியாவில் எப்படி பார்ப்பது.?.. போட்டி தொடங்கும் நேரம்.. முழு விபரம்

0
894
rashid khan and aiden markram

ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் போட்டி தொடர் வருகிற 18-ஆம் தேதி முதல் துபாயில் உள்ள ஷார்ஜாவில் நடைபெற இருக்கிறது. ஐசிசி தொடர்களுக்கு பிறகு இந்த இரண்டு அணிகளும் சந்திக்கும் முதல் இருதரப்பு தொடர் இதுவாகும்.

இந்த சூழ்நிலையில் இந்த இரண்டு அணிகளும் மோதிக் கொள்ளும் போட்டிகளின் தேதி, நேரம் மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன.

- Advertisement -

கிரிக்கெட்டில் வளர்ந்து வரும் அணியான ஆப்கானிஸ்தான் ஐசிசி தொடர்களில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வெளிப்படுத்தி வரும் நிலையில், அடுத்த முன்னேற்றமாக முன்னணி அணிகளோடு இருதரப்புத் தொடர்களில் விளையாட ஆரம்பித்துள்ளது. சமீபத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கலந்து கொண்ட ஆப்கானிஸ்தான் அணி அதற்குப் பிறகு தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக டி20 மற்றும் ஒரு நாள் தொடர்களில் பங்கேற்க இருக்கிறது.

இந்தப் போட்டித் தொடர்கள் அனைத்தும் துபாயில் உள்ள சார்ஜாவில் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதலில் இந்த இரண்டு அணிகளுக்கிடையே ஒரு நாள் தொடர் நடைபெற இருக்கும் நிலையில் செப்டம்பர் 18, 20 மற்றும் 22 ஆம் தேதிகளில் இந்த மூன்று ஒரு நாள் போட்டிகளும் நடக்கும். டி20 தொடருக்கான அட்டவணை இன்னும் வெளிவரவில்லை. சமீபத்தில் நடைபெற்ற அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டித் தொடரில் காயம் காரணமாக வெளியேறிய ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ரஷீத் கான் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒரு நாள் தொடர் மூலம் அணிக்கு திரும்ப இருக்கிறார்.

- Advertisement -

ஐசிசி தொடர்களில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இதுவரை ஐந்து முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் ஐந்து முறையும் தென்னாப்பிரிக்க அணியே வெற்றி பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த ஒரு நாள் தொடர் மூலம் அந்த வரலாறை ஆப்கானிஸ்தான் அணி மாற்ற முயற்சிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு அணிகள் மோதும் ஒரு நாள் தொடர்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தொலைக்காட்சி உரிமம் உள்ள தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த மூன்று ஒரு நாள் போட்டிகளும் இந்திய நேரப்படி மாலை 5:30 மணி அளவில் தொடங்க இருக்கிறது. ஆனால் இந்த போட்டிகள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யப்படவில்லை. மாறாக இணையதளத்தில் பேன் கோடு செயலி மூலம் பார்த்து ரசிக்கலாம்.

இதையும் படிங்க:ரோகித் அலட்சியம் வேணாம்.. பங்களாதேஷ் அணி செஞ்ச இந்த 3 காரியத்தை பாருங்க – வாசிம் ஜாபர் எச்சரிக்கை

தென் ஆப்பிரிக்கா அணியிலும் இந்த தொடர் மூலம் புதிய வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆல்-ரவுண்டர் ஆண்டிலே சிமெலேன் தனது முதல் ஒரு நாள் போட்டியில் விளையாட இருக்கிறார். சுழற்பந்து வீச்சாளர் நகாபா பீட்டர் மற்றும் ஆல்-ரவுண்டர் ஜேசன் ஸ்மித் ஆகியோர் ஏற்கனவே டி20 தொடரில் அறிமுகமாகியுள்ள நிலையில் தற்போது ஒருநாள் தொடரிலும் அறிமுகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -