அடுத்த போட்டியில் ஆப்கான் எதிராக கில் விளையாடுவாரா? அணியுடன் டெல்லி சென்றாரா? – வெளியான புதிய தகவல்கள்!

0
1321
Gill

இந்திய அணி நேற்று ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக உலகக்கோப்பை தொடரில் தனது முதல் போட்டியில் அபார வெற்றி பெற்று நல்ல நம்பிக்கையையும் பெற்று இருக்கிறது!

இந்த போட்டியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் இந்திய அணியின் இளம் துவக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக இடம் பெற்ற இஷான் கிஷான் சந்தித்த முதல் பந்திலேயே கோல்டன் டக் அடித்து வெளியேறி அனைத்து மோசமான துவக்கத்தை தந்தார்.

- Advertisement -

இது மேற்கொண்டு ரோகித் சர்மா மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் என இரண்டு டக் அவுட்டுகளை இந்திய அணிக்கு கொடுத்தது. எளிதாக வெல்ல வேண்டிய போட்டியில் இந்திய அணி ஒட்டுமொத்தமாக எல்லோருக்கும் எக்கச்சக்க அழுத்தத்தை கொடுத்து விட்டது. கில் விளையாடாதது இந்திய அணிக்கு எவ்வளவு பெரிய பாதிப்பு என்று வெளிப்படையாக தெரிந்தது.

இந்த நிலையில் இந்திய அணி அடுத்து வருகின்ற புதன்கிழமை அக்டோபர் 8ஆம் தேதி டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. இந்த மைதானத்தில் இலங்கை அணிக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா அணி 428 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.

இந்தப் போட்டியில் கில் களமிறங்குவதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா? என்பது முக்கியமான விஷயமாக தற்போது பார்க்கப்படுகிறது. ஏனென்றால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியிலே கடைசிவரை அவருடைய உடல் நிலையை நாங்கள் கவனித்து முடிவு செய்வோம் என்று கூறப்பட்டது. அதாவது அந்தப் போட்டியிலேயே விளையாடுவதற்கான வாய்ப்புகள் இருக்கத்தான் செய்கிறது என்பதாக கூறப்பட்டது.

- Advertisement -

இந்த நிலையில் தற்போது கில் அடுத்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடுவாரா என்று வெளிவந்துள்ள செய்தியில் “சுப்மன் கில் வேகமாக குணமடைந்து வருகிறார். அவர் அணியுடன் டெல்லிக்கு பயணம் செய்வார். அவர் அணியுடன் இருப்பார். அவர் ஓய்வு எடுப்பதற்காக தனது சொந்த ஊரான பஞ்சாப் சண்டிகருக்கு செல்ல விரும்பவில்லை. பாகிஸ்தானுக்கு எதிரான முக்கிய போட்டிக்கு முன்பாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக அவர் விளையாட விரும்புகிறார். அதற்கான வாய்ப்புகள் இருக்கவே செய்கிறது!” என்று கூறப்பட்டுள்ளது!

நடப்பு உலக கோப்பையில் அதிக ரன்கள் குவித்த வீரராக இந்திய அணியின் இளம் வீரரான சுப்மன் கில்தான் இருப்பார் என்று, பல நட்சத்திர முன்னாள் வீரர்கள் தங்களுடைய கணிப்பை தெரிவித்து வந்தார்கள். இந்த நிலையில் உலகக் கோப்பையின் முதல் போட்டியையே அவர் தவறவிட்டது வருத்தமான ஒன்றாக அமைந்திருக்கிறது!