ஐசிசி 9வது டி20 உலகக்கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான அணி சிறப்பான முறையில் விளையாடிய சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. மேலும் தங்கள் பிரிவில் வலிமையான நியூசிலாந்தை வெளியேற்றி இருக்கிறது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அணியால் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரை வெல்ல முடியும் என முகமது கைப் கூறியிருக்கிறார்.
கடந்த முறை இந்தியாவில் நடைபெற்ற ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணி மிகச் சிறப்பான முறையில் விளையாடும், அப்போதைய நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளை தோற்கடித்து அசத்தியது. தற்போது மீண்டும் டி20 உலக கோப்பை தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது.
இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைப் கூறும் பொழுது “ஆப்கானிஸ்தான் ஒட்டுமொத்த அணியும் நல்ல பார்மில் இருக்கிறது. மேலும் அவர்களின் பந்துவீச்சாளர்களான ஃபரூக்கி மற்றும் ரசீத் கான் சிறந்த ஃபார்மில் இருக்கிறார்கள். மேலும் இரண்டு தொடக்க ஆட்டக்காரர்களை பற்றி பேசினால் குர்பாஸ் மற்றும் இப்ராகிம் ஜட்ரன் சிறந்த பார்மில் இருக்கிறார்கள். தற்பொழுது வெஸ்ட் இண்டீஸ் கண்டிஷனில் அவர்களால் டி20 உலகக்கோப்பை தொடரை வெல்ல முடியும்.
ஆப்கானிஸ்தான் அணி எல்லா போட்டிகளையும் வெஸ்ட் இன்டீஸில் விளையாடுகிறது. அவர்கள் அமெரிக்காவுக்கு செல்லவில்லை.இரண்டு வாரங்களுக்கு மேலாக அங்கு செலவழித்து, எந்த ஆடுகளத்தில் எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் பந்து வீச வேண்டும் என்று நல்ல ஐடியா அவர்களுக்கு கிடைத்திருக்கிறது.
ஆனால் இப்படிப்பட்ட ஆப்கானிஸ்தானுக்கு ஒரே பிரச்சினையாக பேட்டிங் இருக்கிறது. அவர்களுடைய முன்வரிசை பேட்ஸ்மேன்கள் ரன்கள் குவித்தால், விக்கெட்டை வீழ்த்தி வெற்றி பெற முடிகின்ற பந்து வீச்சு பலம் இருக்கிறது. நாம் ரஷித் கான் மற்றும் பரூக்கி பந்துவீச்சு பார்ம் பற்றி பார்த்திருக்கிறோம்.
இதையும் படிங்க :இவரது விக்கெட்தான் எனக்கு உணர்ச்சிகரமான தருணம்.. ஆனால் அவரே என்னை பாராட்டியும் இருக்கிறார்.. நேத்ரவல்கர் பேட்டி
அவர்களின் பேட்ஸ்மேன் சிறப்பான முறையில் செயல்பட்டால், மெதுவான மற்றும் பந்து திரும்பும் இப்படியான ஆடுகளங்களில் அவர்களை வீழ்த்துவது கடினம். மேலும் அணியில் வீரர்கள் நல்ல பார்மில் இருப்பதால் தற்போதைய டி20 உலகக் கோப்பையை அவர்களால் வெல்ல முடியும்” என்று கூறியிருக்கிறார்.