ஆப்கான் டி20 சீரிஸ்.. இந்திய நட்சத்திர வீரர் ரூல்ட் அவுட்.. ஐபிஎல் தொடருக்கும் சந்தேகம்!

0
389
ICT

அடுத்த ஆண்டு ஜூலை மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு இடையே இதற்கான தயாரிப்பிலும் கிரிக்கெட் அணிகளின் நிர்வாகங்கள் ஈடுபட்டு இருக்கின்றன.

இந்திய டி20 அணியை பொறுத்தவரையில், டி20 உலக கோப்பைக்கு முன்பாக அவர்களுக்கு ஆப்கானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மட்டுமே இருக்கிறது. வேறெந்த சர்வதேச டி20 தொடர்களும் இந்திய அணிக்கு கிடையாது.

- Advertisement -

மேலும் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் நடுவில் நடக்க இருக்கும் ஐபிஎல் டி20 தொடரை, டி20 உலக கோப்பைக்கு இந்திய அணிக்கான பயிற்சி தளமாக பார்க்கிறது.

சர்வதேச டி20 கிரிக்கெட்டுக்கும் மற்றும் உலகக் கோப்பை தொடருக்கும், ஐபிஎல் சரியான பயிற்சி தளமாக இருக்குமா? என்பது கேள்விக்குறிதான். எனவே இது சம்பந்தமாக இந்திய அணி நிர்வாகம் எடுத்திருக்கும் முடிவு குறித்து இறுதியில்தான் தெரிய வரும்.

அதே சமயத்தில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி இருவரும் டி20 உலக கோப்பையில் இடம்பெறுவார்களா? என்பது உறுதியற்ற நிலையில் இருக்கிறது. இதன் காரணமாக இந்திய டி20 அணியை உறுதியாக வடிவமைப்பதிலும் இழுபறி நீடிக்கிறது.

- Advertisement -

இப்படியான நிலையில் ஹர்திக் பாண்டியா ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு திரும்ப மாட்டார் என்று செய்திகள் கிடைத்திருக்கிறது. அவர் ரூல்டு அவுட் ஆகிவிட்டார் என்று சொல்லப்படுகிறது.

மேலும் ஐபிஎல் தொடருக்கும் அவர் கிடைப்பாரா? என்பது குறித்து உறுதி இல்லாத நிலைமை நீடிப்பதாக கூறப்படுகிறது. ஒருவேளை அவர் முழு உடல் தகுதியில் இருந்தால் மட்டுமே, ஐபிஎல் விளையாடுவார் என்று சொல்லப்படுகிறது. இது மட்டும் இல்லாமல் டி20 உலகக்கோப்பைக்கு அவருடைய நிலை எப்படி இருக்கும்? என்பதும் சந்தேகத்துக்குரியதாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.