2025 ஆம் ஆண்டு ஆசியக் கோப்பை தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி ரசீத் கான் தலைமையில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கு சவால் விடும் வகையில் பலமான அணியாகக் காணப்படுகிறது.
இந்த தொடரில் 8 ஆசிய அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டிருக்கின்றன. இந்தியா பாகிஸ்தான், யுஏஇ, ஓமன் மற்றும் இலங்கை ஆப்கானிஸ்தான் பங்களாதேஷ் மற்றும் ஹாங்காங் ஆகிய அணிகள் இன்னொரு பிரிவில் இடம் பெற்று இருக்கின்றன.
தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் ஆப்கானிஸ்தான் அணியில் ரஷித் கான், முகமது நபி, நூர் அகமத், அல்லாஹ் கசன்பர் மற்றும் முஜீப் உர் ரஹ்மான் என மொத்தம் ஐந்து சிறந்த சுழல் பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். யுஏஇ சூழ்நிலைக்கு இவர்கள் மிகவும் தாக்கம் தரக்கூடியவர்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்து பேட்டி யூனிட்டில் குர்பாஸ் இப்ராஹிம் ஜட்ரன், அசமத்துல்லா ஓமர்சாய், செடியுல்லா அடால், முகமது நபி என வலிமையாக காணப்படுகிறது. மேலும் வேகப்பந்து வீச்சுக்கு வழக்கம் போல் பஸருல்லா பருக்கி மற்றும் நவீன் உல் ஹக் ஆகியோர் இடம் பெற்று இருக்கிறார்கள்.
இந்த வகையில் தற்போது ஆப்கானிஸ்தான் அணி இந்திய அணிக்கு ஈடான வலிமையுடன் இருக்கிறது. எப்படியும் தங்கள் பிரிவில் இடம் பெற்று இருக்கும் பாகிஸ்தான் அல்லது இலங்கை என குறைந்தபட்சம் ஒரு பெரிய அணியையாவது வீழ்த்தி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற அதிகபட்ச வாய்ப்புகள் இருப்பதாக கிரிக்கெட் வல்லுனர்கள் கூறுகிறார்கள்.
இதையும் படிங்க : இந்திய வீரர்களை சோதிக்காதீங்க.. தேவையே இல்லாத விஷயத்தை ஏன் கொண்டு வரீங்க.? இந்திய பயிற்சியாளர்களுக்கு அஸ்வின் கேள்வி
ஆப்கான் அணி: ரஷித் கான் (கேட்ச்), ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், தர்வீஷ் ரசூலி, செடிகுல்லா அடல், அஸ்மத்துல்லா உமர்சாய், கரீம் ஜனத், முகமது நபி, குல்பாடின் நைப், ஷரபுதீன் அஷ்ரப், முகமது இஷாக், நூர் அஹ்மத், முஜீப் உர் ரஹ்மான், பரித் அஹமத் மாலிக், ஃபசல்ஹக் ஃபரூக்கி மற்றும் நவீன் உல் ஹக்.