இந்திய வீரர்களை சோதிக்காதீங்க.. தேவையே இல்லாத விஷயத்தை ஏன் கொண்டு வரீங்க.? இந்திய பயிற்சியாளர்களுக்கு அஸ்வின் கேள்வி

0
28

இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக செப்டம்பர் மாதத்தில் இருந்து ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் விளையாட உள்ளது. இந்த சூழ்நிலையில் அணி வீரர்களுக்கு புதிதாக பிராங்கோ டெஸ்ட் எனும் முறையை இந்திய கிரிக்கெட் நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின், இந்தப் பிராங்கோ டெஸ்ட் குறித்து தனது கேள்விகளை எழுப்பி இருக்கிறார்.

- Advertisement -

அடுத்த வருடம் நடைபெற உள்ள டி20 உலக கோப்பையை கருத்தில் கொண்டு ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரை இந்திய அணி டி20 வடிவில் விளையாட உள்ளது. இதில் கடந்த வியாழக்கிழமை இந்திய அணியின் பலம் மற்றும் கண்டிஷனிங் பயிற்சியாளராக அட்ரியன் லு ரூக்ஸ் பொறுப்பேற்று இருக்கிறார். இவர் ரக்பி மற்றும் கால்பந்து விளையாட்டில் பரவலாக பயன்படுத்தப்படும் பிராங்கோ டெஸ்ட்டை இந்திய வீரர்களுக்கு பரிந்துரைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதாவது வீரர்களின் உடல் திறனை சோதிக்க மற்றும் வலுப்படுத்துவதற்கு ஏதுவாக இந்த டெஸ்ட் இருக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் இது குறித்து கேள்வி எழுப்பு இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின், தற்போது வேலை செய்து கொண்டிருக்கும் எதையும் புதிதாக மாற்ற வேண்டிய அவசியம் எதற்காக வந்தது? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். அதேபோல புதிய பயிற்சி முறைகள் வீரர்களின் காயங்களுக்கு வழிவகக் கூடும் எனவும் சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “நான் சில கேள்விகளை எழுப்ப விரும்புகிறேன். ஒரு வீரராக ஒரே மாதிரியான செயல்பாடு இல்லாதது தான் பிரச்சனையாக இருக்கக்கூடும். அதைக் கொடுப்பது தான் மிகவும் முக்கியம். ஒரு புதிய பயிற்சியாளர் வரும்போதெல்லாம், பழைய பயிற்சியாளர் உடன் ஆறு மாதம் அல்லது ஒரு வருடம் இணைந்து பணியாற்றி விட்டுதான் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும். வேலை செய்து கொண்டிருக்கும் எதையும் மாற்ற வேண்டிய அவசியம் இல்லை.

இதையும் படிங்க:ஆசிய கோப்பையில் இடம்பெறாத வீரர்களை வைத்து 16 பேர் கொண்ட இந்திய அணி.. ஆகாஷ் சோப்ரா தேர்வு

ஏதாவது வேலை செய்தால் முதலில் அதனைப் பற்றி விவாதிக்க வேண்டும். அதற்குப் பிறகுதான் அது குறித்து மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். பயிற்சியாளர்கள் மாறும்போது சோதனை முறைகளும் மாறுகிறது, பயிற்சியாளர் மாறுகிறார் பின்பு சோதனை திட்டங்களும் மாறுகிறது. இது நிகழும்போது வீரர்கள் நிறைய சிரமங்களை சந்திக்கிறார்கள். ஒரு வீரராக நீங்கள் பயிற்சி திட்டங்களை மாற்றிக் கொண்டே இருந்தால் அது அணி வீரர்களுக்கு நிறைய சிரமங்களை ஏற்படுத்தக்கூடும் மேலும் அது காயங்களுக்கு வழிவகுக்கும்” என்று அஸ்வின் பேசியிருக்கிறார்.

- Advertisement -