இப்ப திறமையான கிரிக்கெட்டர் இவங்க 3 பேருதான்.. அதுல 2 இந்திய வீரர்கள் – ஆப்கான் நூர் அகமத் தேர்வு

0
2671
Noor

ஆசிய கண்டத்தில் சமீபத்தில் உருவான அணிகளில் மிகவும் அபாரமான முன்னேற்றத்தைக் கொண்டிருக்கும் அணியாக ஆப்கானிஸ்தான் மாறி இருக்கிறது. கடந்த இரண்டு உலக கோப்பைகளாக அவர்களது செயல்பாடு பிரமிக்க வைக்கிறது. ஆப்கானிஸ்தானின் இளம் திறமையான சுழல் பந்துவீச்சாளர் நூர் அகமது தற்போதைய கிரிக்கெட்டில் மூன்று திறமையான வீரர்களை தேர்வு செய்து இருக்கிறார்.

கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் அரையிறுதி வாய்ப்பை நெருங்கி வந்து ஆப்கானிஸ்தான் அணி இழந்தது. ஆனாலும் இங்கிலாந்து, பாகிஸ்தான் மற்றும் இலங்கை என உலகக் கோப்பையை வென்ற அணிகளை வென்று அசத்தியது.

- Advertisement -

இந்த நிலையில் இந்த முறை நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளை தோற்கடித்து அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்று ஆச்சரியப்படுத்தியது. இந்த இரண்டு அணிகளிலும் இடம் பெற்று விளையாடியவராக இளம் இடதுகை சைனா மேன் பந்துவீச்சாளர் நூர் அகமத் இருக்கிறார். மேலும் இவர் தற்பொழுது அமெரிக்காவில் நடைபெறும் எம்எல்சி லீக்கில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அவரிடம் தற்போது கிரிக்கெட் விளையாடி வருவதில் மூன்று திறமையான வீரர்களை தேர்ந்தெடுக்கும்படி கேட்ட பொழுது. அவர் முதலில் சர்வதேச கிரிக்கெட்டில் 26,000 ரன்களுக்கு மேல் குவித்து, ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரராக இருக்கும் ரன் மெஷின் விராட் கோலியை தேர்வு செய்தார்.

- Advertisement -

இதற்கு அடுத்து அவர் இரண்டாவது வீரராக தன்னுடைய அணியின் கேப்டன் மற்றும் சீனியர் வீரரான ரஷீத் கானை தேர்வு செய்திருக்கிறார். ரஷித் கான் இதுவரையில் ஒட்டு மொத்தமாக டி20 கிரிக்கெட்டில் 429 போட்டிகளில் விளையாடிய 583 விக்கெட்டுகள் கைப்பற்றி, எதிர்காலத்தில் டி20 கிரிக்கெட்டில் யாரும் எட்ட முடியாத சாதனைகளுக்கு பெரிய அடித்தளத்தை உருவாக்கியவராக இருக்கிறார்.

இதையும் படிங்க : பிரச்சனை முடிந்தது.. எனக்கான அதை கண்டுபிடிச்சிட்டேன்.. இனிமே எல்லாமே வேற மாதிரி இருக்கும் – ரிஷப் பண்ட் பேட்டி

இதைத் தொடர்ந்து மூன்றாவது வீரராக அவர் ஐபிஎல் தொடரில் தன்னுடைய குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மன் கில்லை தேர்ந்தெடுத்திருக்கிறார். இந்திய அணியின் பேட்டிங் தூண் விராட் கோலி தன்னுடைய கிரிக்கெட் கேரியரின் கடைசி கட்டத்தில் இருக்கும் நிலையில், இந்திய கிரிக்கெட் நிர்வாகம் சுப்மன் கில்லை அடுத்து அவருடைய இடத்திற்கு பார்க்கும் அளவிற்கு திறமை கொண்டவராக இருக்கிறார். மேலும் இந்திய வெள்ளைப்பந்து கிரிக்கெட் வடிவங்கள் இரண்டுக்கும் துணை கேப்டன் ஆகவும் சமீபத்தில் மாற்றப்பட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -