பிரச்சனை முடிந்தது.. எனக்கான அதை கண்டுபிடிச்சிட்டேன்.. இனிமே எல்லாமே வேற மாதிரி இருக்கும் – ரிஷப் பண்ட் பேட்டி

0
711
Rishabh

இந்திய அணி நேற்று இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் சாதனை ஒன்றை தவறவிட்டார். மேலும் இந்திய டி20 அணியில் தான் விரும்பக்கூடிய ரோல் பற்றி பேசி இருக்கிறார்.

நேற்றைய போட்டியில் சூரியகுமார் உடன் இணைந்து வழக்கத்திற்கு மாறாக மிகவும் பொறுமையாக ஒத்துழைப்பு கொடுத்தார். சூரியகுமார் யாதவ் 26 பந்தில் அதிரடியாக 58 ரன்கள் எடுத்து வெளியேறிய பிறகு, ரிஷப் பண்ட் தன்னுடைய அதிரடி ஆட்டத்திற்கு திரும்பி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

- Advertisement -

கடைசி கட்டத்தில் பொறுப்பை கையில் எடுத்த ரிஷப் பண்ட் 33 பந்துகள் சந்தித்து 49 ரன்கள் எடுத்தார். நேற்று அவர் அரைசதம் அடித்திருந்தால் இலங்கை அணிக்கு எதிராக சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் அரை சதம் அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்கின்ற சாதனையை படைத்திருப்பார்.

நிறைய திறமைகளை வைத்திருக்கும் ரிஷப் பண்டுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்கின்ற எண்ணத்தில் அவரை இந்திய டி20 பேட்டிங் வரிசையில் மூன்றாவது இடத்தில் களம் இறக்கினேன் என ரோகித் சர்மா கூறியிருந்தார். ஒருவகையில் ரிஷப் பண்ட் விளையாடும் விக்கெட் பற்றி கவலை இல்லாத அதிரடி முறைக்கு டாப் ஆர்டர்தான் சரி வரும். எனவே இந்திய டி20 அணியில் ரிஷப் பண்டுக்கு ரோகித் சர்மா நிரந்தர இடத்தை வாங்கி கொடுத்து இருக்கிறார் என்று கூறலாம்.

இதுகுறித்து நேற்றைய போட்டி முடிவுக்கு பின் பேசிய ரிஷப் பண்ட் “நிச்சயமாக நான் பேட்டிங் வரிசையில் மூன்றாம் இடத்தில் விளையாடுவதை ரசிக்கிறேன். நான் மூன்றாம் இடத்தில் விளையாடத்தான் ஆரம்பித்தேன். இந்த இடத்தில் நான் பேட்டிங் செய்ய மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன். இந்த புதிய ரோல் ஒரு வீரராக நான் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயம் என்று நினைக்கிறேன்.

- Advertisement -

சில சமயங்களில் புதிய ரோலுக்கு செட் ஆவதற்கு நேரம் எடுக்கும். ஆனால் எனக்கு இந்த ரோல் மிகவும் பிடித்த ஒன்று என்கின்ற காரணத்தினால் செட் ஆவது மிகவும் எளிதானதாகவே இருந்தது. மேலும் எனது கிரிக்கெட்டை இங்கிருந்து எப்படி முன்னோக்கி கொண்டு செல்வது என்று யோசித்து ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக செயல்பட முயற்சி செய்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க : நாங்க 4 பேர் இப்படி.. 4 பேர் அப்படி.. இந்த பிளான்ல எதிர் டீம் பவுலர்கள் தப்பிக்க முடியாது – அக்சர் படேல் விளக்கம்

ரிஷப் பண்ட் டாப் ஆர்டரில் பேட்டிங் செய்யும்பொழுது முன்கூட்டியே அவரது விக்கெட்டை இழந்து விட்டாலும் கூட, பின் வரக்கூடியவர்கள் சமாளித்து விளையாட முடிகிறது. அதுவே ரிஷப் பண்ட் ஐந்தாவது இடத்திற்கு மேல் வந்து பேட்டிங் செய்து அவருடைய பாணியில் விக்கெட் பற்றி கவலை இல்லாமல் விளையாடி ஆட்டம் இழந்தால் அது அணியை பாதித்து விடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.