இந்தியா பாகிஸ்தான் தென் ஆப்பிரிக்கா செய்யாததை செய்த ஆப்கானிஸ்தான் ; பங்களாதேஷை வீழ்த்தி ஒருநாள் தொடரை கைப்பற்றியது!

0
561
Afghanistan

ஆப்கானிஸ்தான் அணி பங்களாதேஷ்க்கு சுற்றுப்பயணம் செய்து மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடி வருகிறது. ஒரே போட்டி மட்டும் கொண்ட டெஸ்ட் தொடரின் போட்டியில் 546 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி பங்களாதேஷ் மிக பிரம்மாண்டமான வெற்றியை பெற்றிருந்தது.

இந்த நிலையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் தற்பொழுது நடந்து வருகிறது. இதன் முதல் போட்டி மழையால் பாதிக்கப்பட அதில் 17 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி டக்வொர்க் லீவிஸ் விதியால் வென்று இருந்தது.

- Advertisement -

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டி நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி மிகச் சிறப்பாக விளையாடி 9 விக்கெட் இழப்புக்கு 331 ரன் எடுத்தது.

ஆப்கானிஸ்தான் அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் குர்பாஸ் மற்றும் இப்ராகிம் ஜட்ரான் இருவரும் 256 ரன்கள் முதல் விக்கட்டுக்கு சேர்த்தும் இருவரும் சதம் அடித்தும் அசத்தினார்கள். சகிப் அல் ஹசன் 50 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து களம் இறங்கிய பங்களாதேஷ் அணியை பந்துவீச்சில் மிகச் சாதாரணமாக ஆப்கானிஸ்தான் சுருட்டி காட்டியது. 43.2 ஓவர்களில் 189 ரன்களுக்கு பங்களாதேஷ் அணி சுருண்டது. ஆப்கானிஸ்தான் அணியின் பரூக்கி அபாரமாக பந்து வீசி 7 புள்ளி இரண்டு ஓவர்களில் ஒரு மெய்டன், 22 ரன்கள் விட்டுக் கொடுத்து மூன்று விக்கட்டுகளை வீழ்த்தினார்.

- Advertisement -

இதன் மூலம் பங்களாதேஷ் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரை 2-0 என தற்பொழுது ஒரு ஆட்டம் எஞ்சி இருக்கும் பொழுதே கைப்பற்றி இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு ஐக்கிய அரபு அமீரகத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக டி20 தொடரை கைப்பற்றி இருந்தது. அதற்குப் பிறகு இது ஆப்கானிஸ்தான் அணிக்கு மிகப்பெரிய வெற்றியாகும்.

மேலும் 2019 ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்குப் பிறகு பங்களாதேஷ் அணி உள்நாட்டில் நடைபெற்ற ஒருநாள் தொடர்களை இரண்டு முறை மட்டும்தான் இழந்து இருக்கிறது. அந்த இரண்டு முறையும் இங்கிலாந்துக்கு எதிராக மட்டுமே இழந்திருக்கிறது.

இந்தியா பாகிஸ்தான் இலங்கை தென்னாபிரிக்கா ஜிம்பாப்வே அயர்லாந்து மேலும் ஆப்கானிஸ்தான் உட்பட விளையாடிய யாரிடமும் உள்நாட்டில் ஒருநாள் கிரிக்கெட் தொடரை இழந்தது கிடையாது. உள்நாட்டில் டி20 தொடரில் ஆஸ்திரேலியாவை இருந்தது. மேலும் இந்தியாவை இந்த இடைப்பட்ட காலத்தில் இருமுறை சொந்த நாட்டில் வைத்து ஒருநாள் தொடரை வென்று இருக்கிறது.

இப்படி உள்நாட்டில் புலியாக வலம் வந்த பங்களாதேஷ் அணியை ஆப்கானிஸ்தான் அணி இந்த முறை வெகு எளிதாக வென்று அவர்களது பெருமைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. இது ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தொடர் வெற்றி ஆகும்!