உலக கிரிக்கெட்

44.3 ஓவர் 10 விக்கெட்.. ஜிம்பாப்வே அணி அசத்தல் பவுலிங்.. ரஷித் கானின் ஆப்கான் அணி திணறல்.. 2வது டெஸ்ட்

ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி மூன்று ஒரு நாள், மூன்று டி20 மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் டி20 மற்றும் ஒரு நாள் தொடரை ஆப்கானிஸ்தான் அணி வென்ற நிலையில், டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் சரிசமமாக மோதி ரசிகர்களுக்கு விருந்தளித்துள்ளது.

- Advertisement -

முதல் டெஸ்ட் போட்டியில் யாருமே எதிர்பார்க்காத வகையில் இரு அணிகளுமே ரன் குவிப்பில் ஈடுபட்டு ரசிகர்களுக்கு விருந்தளித்தனர். இதனால் இரண்டாவது டெஸ்ட் போட்டி மீதான எதிர்பார்ப்பு எகிறியது. முதல் டெஸ்ட் போட்டியில் இரு அணிகளுமே முதல் இன்னிங்ஸில் 500 ரன்ளுக்கு மேல் அடித்து அசத்திய நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி அதற்கு நேர் மாறாக நடந்திருக்கிறது.

தடுமாறிய ஆப்கானிஸ்தான் அணி பேட்டர்ஸ்

புல்வாயோவில் நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர் அப்துல் மாலிக் 17 ரன்களிலும்,ரியாஸ் ஹசன் 12 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரஹ்மத் ஷா 19 ரன்களிலும், கேப்டன் அஸ்மதுல்லா 13 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேறினர். இதனால் ஆப்கானிஸ்தான் அணி 59 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை சேர்ப்பதற்குள் தடுமாறியது. ஆப்கானிஸ்தான் அணியின் நடுவரிசை வீரர்கள் போராடி ரன்களை சேர்க்க முயற்சி செய்தனர்.

- Advertisement -

44.3 ஓவரில் சுருட்டிய ஜிம்பாப்வே அணி

ஆனால் ஜிம்பாப்வே அணியின் அனுபவ வீரரான சிக்கந்தர் ராசா அபாரமாக பந்து வீசி ஆப்கானிஸ்தான் விக்கெட்டுகளை வேட்டையாடினார். அப்சர் சாய் 16 ரன்களிலும், ஷாஹிதுல்லா 12 ரன்களிலும் இஸ்மத் ஆலம் டக் அவுட் ஆகியும் ஆட்டமிழந்தனர். ரஷித் கான் மட்டும் அதிரடியாக விளையாடி நான்கு பவுண்டரிகள் அடித்து 20 ரன்கள் சேர்த்த நிலையில் பெவிலியன் திரும்பினார்.

இதையும் படிங்க: பாகிஸ்தான் 2வது டெஸ்ட்.. தென் ஆப்பிரிக்கா பிளேயிங் XI அறிவிப்பு.. 18 வயது ராஜஸ்தான் ராயல்ஸ் வீரருக்கு இடம்

இதனால் ஆப்கானிஸ்தான் அணி 44.3 ஓவர்களில் 157 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஜிம்பாப்வே அணியில் சிக்கந்தர் ராசா மற்றும் நியூமன் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர். முதல் டெஸ்ட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியின் 10 விக்கெட்டு களையும் வீழ்த்த ஜிம்பாப்வேக்கு 197 ஓவர்கள் தேவைப்பட்ட நிலையில், இரண்டாவது டெஸ்டில் 44.3 ஓவர்களில் எல்லாம் 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார்கள். இந்த நிலையில் முதல் நாள் ஆட்டநேரம் முடிவில் ஜிம்பாப்வே அணி விக்கெட் இழப்பின்றி ஆறு ரன்கள் எடுத்துள்ளது.

- Advertisement -
Published by

Recent Posts