ஆசியக் கோப்பையில் இலங்கையை அடித்து நொறுக்கியது ஆப்கானிஸ்தான்!

0
103
Afghanistan

இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் 15வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கை ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் போட்டியின் மூலம் துவங்கியது!

இந்தப் போட்டிக்கான டாஸ் இல் முதலில் வென்ற ஆப்கானிஸ்தான் கேப்டன் முகமது நபி பந்துவீச்சை தேர்வு செய்தார். குணதிலக மற்றும் ராஜபக்சே என இரண்டு இடதுகை துவக்க பேட்ஸ்மேன்கள் அணியிலிருந்தும், வலதுகை பேட்ஸ்மேன் குஷால் மெண்டிசை அனுப்பியது இலங்கை அணி.

- Advertisement -

இலங்கை அணி செய்த இந்த தவறுக்கான தண்டனையை முதல் ஓவரிலேயே கிடைத்தது. ஆப்கானிஸ்தான் அணியில் இடது கை வேகப்பந்து வீச்சாளர் பரூக்கி குசால் மெண்டிசை முதல் ஓவரிலேயே வெளியேற்றினார். ஆனால் இதற்குப் பிறகும் திருந்தாத இலங்கை அணி நடுவரிசை பேட்ஸ்மேனான அஸலங்காவை மூன்றாவது வரிசையில் இறக்கி அவரையும் முதல் பந்திலேயே பறிகொடுத்தது.

இலங்கை அணிக்கு ஏற்பட்ட இந்த முதல் அடியில் இருந்து இலங்கை அணியால் கடைசிவரை மீளவே முடியவில்லை. இலங்கை அணிக்கு ராஜபக்சே 29 பந்துகளில் முப்பத்தி எட்டு ரன்களையும், சமீக கருணாரத்னே முப்பத்தி எட்டு பந்துகளில் முப்பத்தி ஒரு ரன்களையும் அடிக்க, இலங்கை அணி 20 ஓவர்களின் முடிவில் 105 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆப்கானிஸ்தான் தரப்பில் பரூக்கி 11 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களம் புகுந்த ஆப்கானிஸ்தான் அணியில் துவக்க ஆட்டக்காரர்கள் இலங்கை அணியின் பந்து வீச்சை மைதானத்தின் நாலாபுறங்களிலும் சிதறடித்தனர். பந்து காற்றிலும் தரையிலும் பவுண்டரி லைனை தாண்டி பறந்து கொண்டே இருந்தது.

- Advertisement -

ஆப்கானிஸ்தான் அணியின் துவக்க ஆட்டக்காரரான ரகமத்துல்லா குர்பாஸ் அதிரடியில் மிரட்டினார். அவர் 3 பவுண்டரி 4 சிக்ஸர் என 18 பந்துகளில் 40 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். ஆப்கானிஸ்தான் அணி முதல் விக்கெட்டுக்கு 6.1 ஓவர்களில் 83 ரன்கள் குவித்தது. உடன் விளையாடிய ஹசரத்துல்லாஹ் ஷேசாய் இருபத்தி எட்டு பந்துகளுக்கு 37 ரன்கள் எடுக்க ஆப்கானிஸ்தான் அணி எளிதாய் 8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது. இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி தனது அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை பிரகாசமாக்கி உள்ளது!