SLvsAFG.. 3 ரன் வித்தியாசம்.. திக் திக் போட்டியில் இலங்கையை வென்றது ஆப்கான்

0
539
Afghanistan

இலங்கை வந்துள்ள ஆப்கானிஸ்தான் அணி அந்த அணிக்கு எதிராக தற்பொழுது மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளை இலங்கை அணி வென்று தொடரை கைப்பற்றி விட்டது. இந்த நிலையில் தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி இன்று நடைபெற்றது.

- Advertisement -

இன்றைய போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. துவக்க ஜோடியாக இந்த முறை ஹசரத்துல்லா ஷசாய் 45(22), குர்பாஸ் 70(43) ரன்கள் என மிகச் சிறப்பான துவக்கம் தந்தார்கள்.

நான்காவது இடத்தில் பேட்டிங் செய்ய வந்த வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் அசமத்துல்லா ஓமர்சாய் 31(23) ரன்கள் எடுக்க, ஆப்கானிஸ்தான அணி 20 ஓவர்கள் முடிவில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் குவித்தது. பதிரனா மற்றும் தனஞ்செய டி சில்வா இருவரும் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள்.

இதற்கு அடுத்து பெரிய இலக்கை நோக்கி களம் இறங்கிய இலங்கை அணிக்கு துவக்க ஆட்டக்காரர் பதும் நிஷாங்கா 30 பந்தில் 60 ரன்கள் எடுத்து மிகச் சிறப்பான துவக்கத்தை கொடுத்தார். டாப் ஆர்டர் மற்றும் மிடில் ஆர்டரில் இவரை தவிர வேறு யாரும் சிறப்பாக விளையாடவில்லை.

- Advertisement -

இதற்கடுத்து லோயர் மிடில் ஆர்டரில் வந்த கமிந்து மெண்டிஸ் இறுதிவரை போராடி 39 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்றார். ஆனாலும் பரபரப்பான ஆட்டத்தில் அவரால் இலங்கை அணியை வெல்ல வைக்க முடியவில்லை.

இலங்கை அணியின் வெற்றிக்கு கடைசி இரண்டு ஓவர்களில் 36 ரன்கள் தேவைப்பட்டது. 19ஆவது ஓவரில் இலங்கை அணி 17 ரன்கள் எடுத்தது. இதற்கு அடுத்து இருபதாவது ஓவரில் அந்த அணியின் வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் அந்த அணியால் 15 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. முடிவில் இலங்கை அணி 6 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதையும் படிங்க : “அஸ்வின் இத நீங்க எப்பவாவது பார்த்தா நல்லது.. முதல் முறை எனக்கு” – ஏபி.டிவில்லியர்ஸ் பேட்டி

கடைசிப் பந்துக்கு 10 ரன்கள் வேண்டும் என்கின்ற நிலைமைக்கு ஆட்டம் சென்றுவிட்டது. இதனால் ஒரு பந்து மீதம் இருக்கும் நிலையிலேயே ஆப்கானிஸ்தான் வெற்றி உறுதியாகிவிட்டது. பரபரப்பான இந்த போட்டியில் இறுதியில் ஆப்கானிஸ்தான அணி மூன்று ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தான் அணி தரப்பில் முகமது நபி இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.