15.1 ஓவர்.. ஆப்கானிஸ்தான் ஹாட்ரிக் வெற்றி.. அடுத்த சுற்றுக்கு தகுதி.. நியூசி வெளியேறியது

0
580
Afghanistan

இன்று நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் டிரினிடாட் பிரையன் லாரா மைதானத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் பப்புவா நியூ கினியா அணிகள் மோதி கொண்ட போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் மிக எளிதாக வெற்றி பெற்று ஆப்கானிஸ்தான் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியதோடு அதிகாரப்பூர்வமாக நியூசிலாந்து அணியை வெளியேற்றி இருக்கிறது.

ஆப்கானிஸ்தான அணி இன்றைய போட்டிக்கான டாஸில் வெற்றி பெற்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அனுபவம் இல்லாத பப்புவா நியூ கினியா அணி ஆப்கானிஸ்தான் அணியின் பலம் வாய்ந்த பந்துவீச்சின் முன்னால் எதுவும் செய்ய முடியாமல் திணறியது.

- Advertisement -

பப்புவா நியூ கினியா அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 95 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அந்த அணிக்கு பேட்டிங் வரிசையில் ஏழாவதாக வந்த கிப்லின் டோரிகா மட்டும் தாக்குப்பிடித்து 32 பந்தில் 27 ரன்கள் சேர்த்தார்.

இந்தத் தொடர் முழுக்க அசத்தலாக அசத்தலாக பந்து வீசி வரும் ஆப்கானிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் பஸருல்லா பரூக்கி நான்கு ஓவர்கள் பந்துவீசி 16 ரன்கள் மட்டும் விட்டு தந்து மூன்று விக்கெட் வீழ்த்தினார். இத்தோடு அவர் மொத்தம் மூன்று போட்டிகளில் 12 விக்கெட் கைப்பற்றி இருக்கிறார். இவருடன் நவீன் உல் ஹக் இரண்டு விக்கெட் வீழ்த்தினார்.

- Advertisement -

இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 15.1 ஓவரில் இலக்கை எட்டி மூன்று விக்கெட்டுகளை இழந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் மூன்றாவது வெற்றியை தொடர்ந்து பெற்றது. ஆப்கானிஸ்தான் அணியின் குல்பதின் நைப் 36 பந்துகளில் 49* ரன்கள் எடுத்தார். இதன்மூலம் ஆப்கானிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது.

இதையும் படிங்க : இந்தியா vs கனடா.. நாளை அச்சுறுத்தும் மழை.. இந்திய அணியை முக்கிய வேலையை செய்ய விடுமா?.. வானிலை அறிக்கை

இது சி பிரிவில் மூன்று வெற்றிகள் உடன் வெஸ்ட் இண்டிஸ் அணியும் அடுத்த சுற்றுக்கு முன்னேறிவிட்டது. எனவே அதிகாரப்பூர்வமாக நியூசிலாந்து அணி அடுத்த சுற்றுக்கான வாய்ப்பு இழந்து முதல் சுற்றோடு வெளியேறுகிறது. ஆப்கானிஸ்தான் அணி கடந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடியது போலவே நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரிலும் அசத்தியிருக்கிறது.

- Advertisement -