இந்தியா vs கனடா.. நாளை அச்சுறுத்தும் மழை.. இந்திய அணியை முக்கிய வேலையை செய்ய விடுமா?.. வானிலை அறிக்கை

0
362
INDvsCAN

தற்பொழுது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் என இரு நாடுகளில் நடைபெற்றுக் கொண்டு வரும் ஒன்பதாவது டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்று இருக்கிறது.இந்த நிலையில் நாளை முதல் சுற்றில் கடைசிப் போட்டியில் கனடா அணிக்கு எதிராக அமெரிக்கா புளோரிடா மைதானத்தில் விளையாட இருக்கிறது.

இந்திய அணி ஏற்கனவே தகுதி பெற்றுவிட்ட நிலையில், கனடா அணி அடுத்த சுற்றுக்கான குறைந்தபட்ச வாய்ப்பில் இருக்கிறது. எனவே கனடா அணிக்கு இந்த போட்டி முக்கியமான போட்டியாகவே அமைந்திருக்கிறது. அந்த அணியும் சிறிய அணிகளில் நல்ல முறையில் விளையாடக்கூடிய அணியாக தெரிகிறது.

- Advertisement -

இந்திய அணி முதல் சுற்றில் அமெரிக்கா நியூயார்க் மைதானத்தில் முதல் மூன்று போட்டிகளை முடித்துக் கொண்டு, கடைசி போட்டியில் புளோரிடாவுக்கு வருகிறது. ஏற்கனவே அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்று விட்டாலும் கூட, சூப்பர் எட்டு சுற்றில் செய்ய வேண்டிய சில மாற்றங்களை பரிசோதித்துப் பார்ப்பதற்கு இந்திய அணிக்கும் இந்த போட்டி முக்கியமானதாக அமைகிறது.

இந்த நிலையில் புளோரிடா வானிலை அறிவிப்பு இரண்டு அணி நிர்வாகங்கள் மற்றும் இரண்டு அணிகளின் ரசிகர்களுக்கும் பெரிய சோகத்தை உருவாக்கக் கூடியதாக அமைந்திருக்கிறது. தற்பொழுது புளோரிடாவில் எல்லா பக்கத்திலும் கனமழை பெய்து கொண்டு வருகிறது.

- Advertisement -

நாளை இந்தியா மற்றும் கனடா அணிகள் மோதிக் கொள்ளும் நேரத்திலும் 50% மழை இருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு என வானிலை அறிக்கை கூறுகிறது. இவ்வளவு சதவிகிதம் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டால் பெரும்பாலும் போட்டி நடைபெறுவது கடினம்தான். எனவே இந்தியா கனடா போட்டி மழையால் பாதிக்கப்பட அதிகபட்ச வாய்ப்புகள் இருக்கிறது.

இதையும் படிங்க : நாளை கனடா எதிராக.. இந்திய உத்தேச பிளேயிங் XI.. 3 வீரர்களுக்கு ரோகித் வாய்ப்பு தருவாரா?

மேற்கொண்டு இதே மைதானத்தில்தான் அயர்லாந்து அணி அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக இரண்டு போட்டிகளில் விளையாட இருக்கிறது. இந்த இரண்டு போட்டியுமே மூன்று அணிகளுக்குமே முக்கியமானது. தற்பொழுது மழை பெரிய அளவில் புளோரிடாவில் செய்வதால் பரபரப்பான போட்டிகள் ரசிகர்களுக்கு கிடைக்காமல் போவது வருத்தமான செய்தியாக இருக்கிறது!

- Advertisement -